ஜெ.,வீட்டுல் போலீஸ் பாதுகாப்பு எதுக்கு: மு.க.ஸ்டாலின்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வீட்டிற்கு எதற்காக 240-க்கு மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டுள்ளனர் என்று சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

Last Updated : Dec 24, 2016, 12:21 PM IST
ஜெ.,வீட்டுல் போலீஸ் பாதுகாப்பு எதுக்கு: மு.க.ஸ்டாலின்  title=

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வீட்டிற்கு எதற்காக 240-க்கு மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டுள்ளனர் என்று சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

போயஸ் தோட்ட இல்லத்தில் அதிக எண்ணிக்கையிலான போலீசாரும், உயரதிகாரிகளும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் அதிகாரமீறல் உடனே தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இல்லாவிட்டால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்போம் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: 

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தில், போலீசார் சி.ஐ.டி பாதுகாப்பு பிரிவின் முக்கியமான அணியைச் சேர்ந்த நன்கு பயிற்சியளிக்கப்பட்ட சுமார் 240 பேர் இன்னமும் பணியில் உள்ளதாக செய்திகள் அறிகிறேன். 

தற்போது போயஸ் தோட்ட இல்லத்தில், அரசியல் சட்டரீதியிலான அதிகாரம் படைத்தவர்களோ மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட உயர் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்தவர்களோ யாரும் இல்லை. இந்நிலையில், அங்கே இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான போலீசாரும், உயரதிகாரிகளும் பாதுகாப்பு என்ற பெயரில் பணியில் நியமிக்கப்பட்டிருப்பது, போலீசாரை தனியார் செக்யூரிட்டிகள் போல பயன்படுத்தும் இழிவான செயலாகும். காவல்துறையை சீரழிக்கும் இத்தகைய அதிகார மீறல்களை, முதல்வர் பன்னீர் செல்வம், போலீஸ் உயர் அதிகாரிகள் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாவிட்டால், தி.மு.க. சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்கும் என தெரிவித்துள்ளார். 

இத்தகைய சூழலில், திறமைமிகு அதிகாரிகளையும் காவலர்களையும் தேவையற்ற பணிகளில் ஈடுபடுத்தி வீணடிக்காமல், உரிய பணிகளுக்கு அனுப்ப வேண்டும் என காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் அமைச்சரான தமிழக முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் அவர்களையும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாவிட்டால் சட்டரீதியான நடவடிக்கைகளை எதிர்க்கட்சியான திமு கழகம் மேற்கொள்ளும் எனவும் தெரிவிக்க விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் ஸ்டாலின்

Trending News