22 நாட்கள் தேடுதல் வேட்டை முடிவுக்கு வந்தது; உயிருடன் பிடிக்கப்பட்ட T-23 புலி

கடந்த 22 நாட்களாக எவ்வளவு முயற்சி செய்தும் டிமிக்கி கொடுத்துக்கொண்டு இருந்த T23 புலி இன்று பிடிபட்டு உள்ளது.

Last Updated : Oct 15, 2021, 03:48 PM IST
22 நாட்கள் தேடுதல் வேட்டை முடிவுக்கு வந்தது; உயிருடன் பிடிக்கப்பட்ட T-23 புலி title=

இன்று மசினக்குடி அருகே சுற்றித்திரிந்த T23 புலி வனத்துறை அதிகாரிகளிடம் பிடிப்பட்டது. கடந்த 22 நாட்களாக தேடப்பட்டு வந்த இந்த ஆட்கொல்லி புலியை இன்று பிடிபட்டு உள்ளது. இந்த புலி நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த மசினக்குடி, சிங்காரா வனப்பகுதியில் புலி ஒன்று 4 நபர்களை தாக்கி கொன்றது குறிப்பிடத்தக்கது. 

மசினகுடியில் புதருக்குள் பதுங்கியிருந்த T23 புலியை வனத்துறையினர் பிடித்தனர். இந்த புலிக்கு 13 வயதாகிறது. கடந்த வருடம் கவுரி என்ற பெண்ணையும், சில மாதங்களுக்கு முன்பு எஸ்டேட் குஞ்சு கிருஷ்ணன், சந்திரன் என்ற நரையும், சீல் வாரங்களுக்கு முன்பு பசுவன் என்பவரையும் அடித்துக் கொன்றது. அதுமட்டுமல்லாது 30-க்கும் மேற்பட்ட கால்நடைகளையும் அந்த புலி கொடூரமாக கொன்றுள்ளது. 

புலியின் இந்த கொடூர தாக்குதல்களால் அஞ்சிய பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அந்த ஊர் மக்களின் இடைவிடாத போராட்டத்தின் காரணமாகவும், நீதிமன்றம் தலையீட்டாலும்  அந்த புலியை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் கடந்த சில தினங்களாக தீவிரமாக ஈடுபட்டனர்.

ALSO READ |  T-23 ஆட்கொல்லி புலியின் அச்சுறுத்தும் வீடியோ!

முன்னதாக புலியை சுட்டுக்கொன்று விடுங்கள் என கிராமக மக்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணைய விதிகளின்படி புலியைக் கொலை செய்யக்கூடாது. அப்படி செய்தால் அது வீதிக்கு புறம்பான செயல் எனக்கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். 

இந்த வழக்காகி விசாரித்த நீதிமன்றம், புலியை சுட்டுக்கொல்ல வேண்டாம் எனவும், மயக்க ஊசி செலுத்தி உயிரோடு பிடிக்குமாறும்  வனத்துறை அதிகரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தது.

இதனையடுத்து அந்த புலியை பிடிக்க எவ்வளவு முயற்சி செய்தும் பிடிக்க முடியவில்லை. புலியை கண்காணிக்க வனப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அதன் பின்னர் புலிக்கு இரண்டு முறை மயக்க ஊசி செலுத்தப்பட்டது. ஆனாலும் சிக்கவில்லை. இருப்பினும் மயக்க மருந்தின் வீரியத்தால் புலி சோர்வடைந்துவிடும் என வனத்துறையினர் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், இன்று மசினகுடியில் உள்ள புதருக்குள் T23 புலி பதுங்கியிருப்பது தெறியவந்தது. அங்கு சென்ற வனத்துறையினர் மற்றும் மருத்துவக் குழுவினர் மீண்டும் மயக்க ஊசி செலுத்தினர். அதே இடத்தில் புலி மயக்கமடைந்ததால் வனத்துறையினர் அதைப் பிடித்தனர்.

ALSO READ |  மயக்க ஊசிக்கும் மயங்காத புலி! தேடுதல் வேட்டையில் வனத்துறையினர்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News