சென்னை: தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகத்தில் தமிழை ஆட்சி மொழியாகக் கொண்டுவர தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் இந்திதான் ஆட்சி மொழியாக இருந்து வருகிறது. மேலும் மத்திய அரசு பணிகளில் தமிழர்களை விட வடமாநிலத்தவர்தான் அதிகம் பணிபுரிகின்றனர். மத்தியில் பாஜக தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்த பின்பு, அதிக அளவில் வடமாநிலத்தவர் பணியை ஆக்கரிமித்து உள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மத்திய அரசு பணிகள் மறுக்கப்பட்டு வருவதே இதற்கு காரணம்.
இந்த விவகாரம் குறித்து மத்திய அரசுக்கு எதிராக பல அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தினார்கள். தமிழகத்தில் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்களில் தமிழை ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும் என திமுக உட்பட பல கட்சிகள் கோரிக்கை வைத்தது.
இந்தநிலையில், இன்று தமிழக சட்டப்பேரவையில் மத்திய அரசு அலுவலகங்களில் தமிழை ஆட்சி மொழியாக கோ கொண்டுவர தமிழக அரசு எடுத்த நடவடிக்கை என்ன என்று திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு எழுப்பிய கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் கூறியது,
தமிழகத்தில் இயங்கும் மத்திய அரசு அலுவலகங்களில் தமிழே ஆட்சி மொழியாக இருக்க வேண்டும். இதற்காக மகாராஷ்டிரா மாநிலத்தை பின்பற்றி தமிழகத்தில் மத்திய அரசு அலுவலகங்களில் தமிழே ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்பதற்கான அரசாணை விரைவில் பிறப்பிக்கப்படும் எனத் தெரிவித்தார்.