அதிமுக - பாமக கூட்டணி: அம்மாவின் ஆன்மா OPS & EPS ஐ மன்னிக்காது -தினகரன் சாபம்

பாமகவுடன் கூட்டணி அமைத்த ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்ஸை அம்மாவின் ஆன்மா மன்னிக்காது என்று டிடிவி தினகரன் ஆவேசமாக கூறியுள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 19, 2019, 07:39 PM IST
அதிமுக - பாமக கூட்டணி: அம்மாவின் ஆன்மா OPS & EPS ஐ மன்னிக்காது -தினகரன் சாபம் title=

பாமகவுடன் கூட்டணி அமைத்த ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்ஸை அம்மாவின் ஆன்மா மன்னிக்காது என்று டிடிவி தினகரன் ஆவேசமாக கூறியுள்ளார்.

இன்று அதிமுக மற்றும் பாமக கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் 7 தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடும் எனவும் ஒரு மாநிலங்களவை தொகுதியும் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுக்குறித்து பேசிய அமமுக கட்சியின் தலைவர் டிடிவி தினகரன் கடுமையாக அதிமுக - பாமக கூட்டணியை விமர்சித்துள்ளார். 

அவர் கூறியாதவது: தேர்தல் நேரத்தில் ஒரு கட்சி மற்றொரு கட்சியுடன் கூட்டணி வைப்பது என்பது எப்பொழுதும் இருக்கும் ஒரு வழக்கம். ஆனால் அம்மாவை(ஜெயலலிதா) குறித்து மிகவும் மோசமாக அறிக்கை வெளியிட்ட ராமதாசுடன் கூட்டணி வைப்பதற்கு ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் சென்றிருக்கிறார்கள். ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்ஸை அம்மாவின் ஆன்மா மன்னிக்காது. தேர்தல் நேரத்தில் இந்த கூட்டணிக்கு தக்க பதிலடி கொடுக்கும் அம்மாவின் ஆன்மா. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் அதிமுகவின் கூட்டணி படுதோல்வியை சந்திக்கும் எனக்கூறினார்.

Trending News