மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்க தமிழக அமைச்சரவை ஒப்புதல்!
தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு வழங்க தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள கூட்ட அரங்கில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் துணை முதல்வர் O.பன்னீர்செலவ்ம் உள்பட அமைச்சர்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இடஒதுக்கீடு வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மேலும், ரூ5,000 கோடி அளவுக்கு தொழில் முதலீடு செய்யும் நிறுவனங்களை தமிழகத்தில் அனுமதிக்கவும் ஒப்புதல் வழங்கப்பட்டது. மதுரை, தேனி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்தும் ஆலோசனை நடைபெற்றது.
REDA | Paracetamol மாத்திரைக்கு மருத்துவரின் பரிந்துரை சீட்டு அவசியமில்லை: TN Govt
தற்போது கிராம புறங்களில் 10 ஆயிரத்திற்கும் குறைவான வருமானம் கொண்ட கோயில்களை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த கூட்டத்தில் கோயில்கள் திறப்பை பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் விரிவு படுத்தலாமா என்பது குறித்தும் கூட்டக்தில் விவாதிக்கப்பட்டது.