தமிழகத்தில் இனி கடைகள் இரவு 10 மணி வரை திறந்திருக்கும்: EPS

சென்னையின் டி.நகரில் உள்ள குமரன் சில்க்ஸ் கடை COVID தொலைதூர விதிகளை பின்பற்றாததற்காகவும், அதன் மக்கள் கூட்டத்தை நிர்வகிக்கத் தவறியதற்காகவும் செவ்வாய்க்கிழமை சீல் வைக்கப்பட்டது.

Written by - ZEE Bureau | Last Updated : Oct 21, 2020, 05:36 PM IST
  • தமிழக முதல்வர் கடைகள் மூடுப்படும் நேரத்தை இரவு 9 மணியிலிருந்து இரவு 10 மணியாக நீட்டித்துள்ளார்.
  • இந்த முடிவு, லாக்டௌனிற்குப் பிறகு மாநிலத்தின் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் ஒரு பகுதியாக பார்க்கப்படுகிறது.
  • கட்டுப்பாட்டு மண்டலங்களில் இப்போது இருக்கும் கட்டுப்பாடுகளே தொடரும்.
தமிழகத்தில் இனி கடைகள் இரவு 10 மணி வரை திறந்திருக்கும்: EPS

சென்னை: பண்டிகை காலத்தில் கடைகளுக்கு செல்ல வேண்டிய மக்களின் தேவையை கருத்தில் கொண்டு, தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி, கடைகள் மூடுப்படும் நேரத்தை இரவு 9 மணியிலிருந்து இரவு 10 மணியாக நீட்டித்துள்ளார்.

இந்த முடிவு, லாக்டௌனிற்குப் (Lockdown) பிறகு மாநிலத்தின் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் ஒரு பகுதியாக பார்க்கப்படுகிறது.

ஷாப்பிங் செய்யும் போது கூட்டத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று முதல்வர் கேட்டுக்கொண்டார். நேரத்தை நீட்டிப்பது கூட்டத்தை குறைக்க உதவும்.

சென்னையின் டி.நகரில் உள்ள குமரன் சில்க்ஸ் கடை COVID தொலைதூர விதிகளை பின்பற்றாததற்காகவும், அதன் மக்கள் கூட்டத்தை நிர்வகிக்கத் தவறியதற்காகவும் செவ்வாய்க்கிழமை சீல் வைக்கப்பட்டது.

இந்த விதி காய்கறி கடைகள் மற்றும் மளிகைக் கடைகளுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ALSO READ: சுவர் இருந்தால்தான் சித்திரம், உடல் இருந்தால்தான் உடை: Shopping போகத் துடிக்கும் மக்களே, உஷார்!!

ஆனால், கட்டுப்பாட்டு மண்டலங்களில் (Containment Zones) இப்போது இருக்கும் கட்டுப்பாடுகளே தொடரும். இந்த விதிமுறைகள் எதுவும் அந்த மண்டலங்களுக்கு பொருந்தாது.

கொரோனா காலம் நமக்கு பல பாடங்களைக் கற்றுக்கொடுத்துள்ளது. நமது வாழ்க்கை முறையை மாற்றிக்கொண்டோம். உணவு, பள்ளி, கல்வி, தொழில், கேளிக்கை என வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் நாம் மாற்றங்களைக் கண்டுள்ளோம். இப்போது லாக்டௌன்தான் அகற்றப்பட்டுள்ளதே தவிர தொற்று இன்னும் முற்றிலுமாக தொலைந்து போகவில்லை.

நமக்கு பழக்கப்பட்ட பல விஷயங்களை நாம் விட்டுக்கொடுத்தோம், அமைதி காத்தோம். எதற்காக இதையெல்லாம் செய்தோமோ அது இன்னும் ஓய்ந்து விடவில்லை. கொரோனா இன்னும் குறைந்து விடவில்லை. அந்த கவனம் நம் அனைவருக்கும் எப்போதும் கண்டிப்பாக இருக்க வேண்டும். 

ALSO READ: COVID தொற்றால் கண் பார்வை கோளாறு ஏற்பட்ட முதல் நோயாளி பற்றி AIIMS பகீர் தகவல்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News