ரஜினியை சீரியஸாக எடுத்துக்காதீங்க - வைகோ

ரஜினியை யாரும் சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டாமென்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Aug 9, 2022, 07:34 PM IST
  • ஆளுநர் ரவியை ரஜினி நேற்று ஆளுநர் மாளிகையில் சந்தித்தார்
  • சந்திப்பில் அரசியல் பேசியதாக தெரிவித்தார்
  • ஆளுநர் மாளிகை அரசியலுக்கான இடமில்லை என பலரும் விமர்சனம்
ரஜினியை சீரியஸாக எடுத்துக்காதீங்க - வைகோ  title=

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோவையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மதிமுக புத்துணர்ச்சி பெற்று தமிழகத்தின் அரசியல் சக்தியை தீர்மானிக்கும் அளவுக்கு உள்ளது. கோவை மதிமுகவின் கோட்டை. அறிஞர் அண்ணா பிறந்தநாளை மதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாட உத்தரவிட்டுள்ளோம். ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம் சிந்தனை கொண்ட கட்சிகளை வீழ்த்த திமுகவுடன் லட்சிய கொள்கைகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம்.

இந்தியாவிலே சிறப்பான ஆட்சியை திமுக நடத்தி வருகிறது. புதிய திட்டங்கள், செயல்பாடுகளை செயல்படுத்தி வருகிறது.மத்திய அரசு உணவுப் பொருட்களுக்கு ஜி.எஸ்.டி விதித்து உள்ளதால், பொதுமக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். இந்த வரி விதிப்பினால் அதானிகளும், அம்பானிகளும் பாதிப்பு அடைவதில்லை.

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உருளையின் விலை உயர்வால், மற்ற எல்லா பொருட்களின் விலைவாசியிலும் பாதிப்பு ஏற்படுகிறது. இவற்றின் விலைவாசி உயர்வால் நாளுக்கு நாள் மத்திய அரசின் மீதான வெறுப்பு வளர்ந்து வருகிறது.

மேலும் படிக்க | மக்கள் பிரச்னைகளையா ரஜினி பேசினார்?... கேள்வி எழுப்பும் அழகிரி

நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளை பேச அனுமதிக்கு வேண்டுமென குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு சொன்னது சரி தான். இது அவருடைய அரசியல் பண்பை காட்டுகிறது. ஆளும் அரசு அதை ஏற்க வேண்டும். அதேபோல், 75 ஆண்டுகள் சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடுகளில் தேசிய கொடி ஏற்றுவது வரவேற்ககூடியது.

நடிகர் ரஜினிகாந்த் சொல்வது யாருக்கும் புரியவில்லை. அது அவருக்கும் புரிவதில்லை. ரஜினிகாந்த் அரசியலுக்கு வருகிறேன் எனக் கூறுகிறார். ஆட்களை சேர்த்ததுக்கு பின்னர், அரசியலுக்கு வரவில்லை என்கிறார். எனவே, நடிகர் ரஜினிகாந்தை சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டாம்” என்றார்.

Rajini

முன்னதாக, நடிகர் ரஜினிகாந்த் நேற்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்தார். அதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, ஆளுநரிடம் அரசியல் குறித்து பேசியதாகவும் ஆனால் அதுதொடர்பாக வெளியில் சொல்ல முடியாது எனவும் கூறினார். ரஜினியின் இந்தப் பேச்சுக்கு பிறகு, மாநிலத்தின் ஆளுநருடன் எப்படி ஒருவர் அரசியல் பேசலாம் என பலரும் கேள்வி எழுப்பி தங்களது கண்டனத்தையும் பதிவு செய்துவருகின்றனர்.

மேலும் படிக்க | கேரள மக்களின் பாதுகாப்பை தமிழகம் உறுதி செய்யும் - முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News