கடும் நிதி சுமையில் தமிழ்நாடு மின்சார வாரியம் -அமைச்சர் தங்கமணி!

தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் நிதி நெருக்கடி இருக்கும் பட்சத்திலும் தற்போது மின்சார கட்டணம் உயர்த்தப்படாது என்று அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்துள்ளார்!

Last Updated : Sep 12, 2019, 10:09 AM IST
கடும் நிதி சுமையில் தமிழ்நாடு மின்சார வாரியம் -அமைச்சர் தங்கமணி! title=

தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் நிதி நெருக்கடி இருக்கும் பட்சத்திலும் தற்போது மின்சார கட்டணம் உயர்த்தப்படாது என்று அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்துள்ளார்!

இதுதொடர்பாக செய்தியாளர்களிடன் பேசுகையில்.,... தமிழகத்தில் மின்சாரக் கட்டணங்களை மாற்றியமைப்பதில் எங்களிடம் தற்போது எந்த முன்மொழிவும் இல்லை. புதிய மின்சார இணைப்புகளுக்கான கட்டணத்தைத்தான் திருத்த தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் செயல்படுகிறது, என்றபோதிலும் அதில் ஒரு முடிவு எட்டப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

இன்னும் சில மாதங்களுக்கு மின்சார கட்டண உயர்வு இருக்காது என தெரிவித்த அமைச்சர், முதல்வர் பழனிசாமியுடன் இது குறித்து ஆலோசிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். 

இந்த ஆண்டுக்கு மட்டும் டான்ஜெட்கோவின் நிதிச்சுமை ரூ.7 ஆயிரம் கோடியாக உள்ளது என குறிப்பிட்ட அமைச்சர், கஜா புயல் செய்த பாதிப்பை ஈடுசெய்ய மேற்கொண்ட மின்சார கட்டமைப்புகளால் இந்த நிதி சுமை ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். கஜா புயல் பாதிப்பால் சுமார் ரூ.2,500 கோடி செலவு செய்ய வேண்டியதாகிவிட்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஊதிய ஆணையம் பரிந்துரைகளை அமலாக்குவதில் ரூ.1,200 கோடி கூடுதல் செலவிடப்பட்டது. அவை தவிர நிலக்கரியின் விலை, அவற்றை கொண்டு வரும் செலவு, மத்திய தொகுப்பில் இருந்து பெறும் மின்சாரத்தின் விலை ஆகியவை அனைத்தும் உயர்வு, மத்திய தொகுப்பில் இருந்து பெறப்படும் மின்சாரத்தின் விலை யுனிட் ஒன்றுக்கு ரூ.0.44 உயர்வு போன்ற காரணங்களால் மிகப்பெரிய நிதி சுமையினை தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் சந்திக்க நேரிட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த பிரச்சனைகளை சமாளிப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு., காற்றாலை மின்சாரம் சிறிதளவாகத்தான் உள்ளது. காற்று வீசும் காலமும் முடிவுக்கு வர உள்ளது. எனவே அனல் மின்சார யூனிட்களை தயாராக வைத்திருக்கிறோம். நிலக்கரி சேமிப்பையும் உயர்த்தியுள்ளோம். இந்த ஆண்டு எந்த இடத்திலும் மின்வெட்டு ஏற்படவில்லை. காற்றாலை மின்சாரத்தை பயன்படுத்துவதில் எங்களுக்கும், காற்றாலை நிறுவனங்களுக்கும் பிரச்சினைகள் உள்ளன. அந்த பிரச்சினைகள் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் விசாரணையில் உள்ளன. இதுபோன்ற பிரச்சினைகளால் ஆண்டுக்கு ரூ.2 ஆயிரம் கோடி இழப்பை நாங்கள் சந்தித்துக் கொண்டிருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.

Trending News