தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் விவகாரத்தில் சிபிஎஸ்இ முடிவை பொறுத்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்!
நீட் தேர்வில் தமிழ்மொழி வினாத்தாள்களில் பிழை இருப்பதாக உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், பிழை இருந்த 49 வினாக்களுக்கு 4 மதிப்பெண்கள் வீதம் தமிழில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கூடுதலாக 196 மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், இந்த திருத்தம் செய்யப்பட்ட பிறகு மீண்டும் மதிப்பெண் பட்டியலை சிபிஎஸ்இ வெளியிட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதோடு தற்போது நடைபெற்று வரும் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வை நிறுத்தவும் நீதிமன்றம் தெரிவித்தது.
இந்நிலையில், இது குறித்து இன்று சென்னை பெசன்ட் நகரில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில்..! தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் விவகாரத்தில் சிபிஎஸ்இ முடிவை பொறுத்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்களுக்கு சாதகமாகவே தமிழக அரசு செயல்படும் என்றும் தெரிவித்தார்.