கொரோனாவை வெற்றிக் கொண்ட தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்!

கடந்த பத்து நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பூரண குணமடைந்துவிட்டார்... பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் நிலை கவலைக்கிடம்...  

Written by - ZEE Bureau | Last Updated : Aug 14, 2020, 05:05 PM IST
கொரோனாவை வெற்றிக் கொண்ட தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்!

புதுடெல்லி: கொரோனாவை வெற்றிக் கொண்ட தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்!
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு கடந்த பத்து நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.  தற்போது அவர் உடல்நிலை நன்றாக இருப்பதாக மருத்துவமனை அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.
தொற்றுக்கான அறிகுறி பெரிய அளவிற்கு இல்லாததால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள தமிழக ஆளுநர் அறிவுறுத்தப்பட்டிருந்தார். தற்போது பன்வாரிலால் புரோகித்துக்கு கொரோனா தொற்று முற்றிலும் குணமாகிவிட்டதாக காவேரி மருத்துமனை அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது.  
இந்த நிலையில் பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துமனை தெரிவித்துள்ளது.  

Read Also | August 14: சர்வதேச அளவில் கொரோனா பாதிப்பு அண்மை நிலவரம்

More Stories

Trending News