தொடர்ந்து முல்லைப் பெரியார் அணை விவகாரத்தில் கேரளா அரசு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அவமதிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகிறது என தமிழக அரசு குற்றசாட்டி உள்ளது.
அதுக்குறித்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. அதில்,
முல்லைப் பெரியாற்றின் குறுக்கே புதிய அணை கட்டுவதற்கான ஆய்வுகளை மேற்கொள்ள கேரள அரசு மேற்கொண்டு வருகிறது. மேலும் முல்லைப் பெரியாற்றின் நம்பகத்தன்மை குறைக்கும் வகையில், அவ்வப்போது ஆதாரம் இல்லாத குற்றசாற்றுக்களை கேரள அரசு கூறிவருகிறது.
2014-ஆம் ஆண்டு மே மாதம் 7-ஆம் தேதி உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் முல்லைப் பெரியாறு அணை மிகவும் வலிமையாக இருப்பதாகவும், அங்கு புதிய அணை கட்டவேண்டிய தேவையே இல்லை என்றும் கூறியிருக்கிறது. அதுமட்டுமின்றி, அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவது உள்ளிட்ட முடிவுகளை எடுக்க உச்சநீதிமன்ற ஆணைப்படி வல்லுனர் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாற்றின் அணை வலிமையாக இருப்பதாக உச்சநீதிமன்றம் கூறிவிட்ட நிலையில் அது வலுவிழந்து விட்டதாக மத்திய அரசிடம் கேரள அரசு கூறியிருப்பதும் உச்சநீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும்.
இது உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு எதிரான செயல் ஆகும் எனக்கூறி கேரளா அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது தமிழக அரசு. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.