புது தில்லி: இந்தியா தொடர்ந்து தன் COVID சோதனை திறனை அதிகரித்து வருகிறது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ICMR) படி, ஒரு மில்லியனுக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனைகள், 27000 க்கும் அதிகமான புதிய உச்சத்தை எட்டியுள்ளன.
COVID-19 நோய்த்தொற்றிலிருந்து மீண்டு வருபவர்களைப் பொறுத்த வரையில், டெல்லிக்கு அடுத்தபடியாக (90 சதவீதம்) தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் மீட்பு விகிதம் (Recovery Rate) 85 சதவீதமாக உள்ளது.
சுகாதார அமைச்சகத்தின் (Union Ministry of Health) கூற்றுப்படி, பீகார் 83.80 சதவீத மீட்பு விகிதத்துடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. தமன் மற்றும் டியு மற்றும் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி (82.60 சதவீதம்), ஹரியானா (82.10 சதவீதம்), குஜராத் (80.20 சதவீதம்) என மாநிலங்களின் மீட்பு விகிதம் உள்ளது.
ALSO READ: COVID-19 குறித்து பயப்பட வேண்டாம்... மருத்துவ நிபுணர்கள் கூறுவது என்ன?...
"தீவிர சோதனைகள் மூலம் விரைவான கண்டறிதல், விரிவான கண்காணிப்பு மற்றும் தொடர்புத் தடமறிதல், மற்றும் நோயாளிகளின் நேரத்திற்கேற்ற மற்றும் திறமையான மருத்துவ சிகிச்சையில் கவனம் செலுத்துவது ஆகியவை அதிக எண்ணிக்கையிலான விரைவான மீட்டெடுப்புகளை உறுதிசெய்துள்ளன. இது இறப்பு விகிதத்தையும் (CFR) குறைவாக வைத்திருக்கிறது," என மத்திய சுகாதார அமைச்சகம் வியாழனன்று ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளது.
Early identification through aggressive TESTING, comprehensive surveillance & contact TRACING, and focus on timely and efficient clinical TREATMENT of patients have ensured high number of speedy recoveries. This has also kept the Case Fatality Rate low. pic.twitter.com/gNruO7ZtZ9
— Ministry of Health (@MoHFW_INDIA) August 27, 2020
CFR பட்டியலில், 0.27 சதவீதத்துடன் அசாம் முதலிடத்திலும், அதைத் தொடர்ந்து கேரளா (0.39 சதவீதம்), பீகார் (0.42 சதவீதம்), ஒடிசா (0.51 சதவீதம்) ஆகிய மாநிலங்கள் உள்ளன.
பல மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் மீட்பு வீதம் மற்றும் இறப்பு விகிதத்திற்கான தேசிய சராசரியை விட அதிக ஊக்கமளிக்கும் புள்ளிவிவரங்களுடன் சிறப்பாக செயல்பட்டுள்ளன என்று அமைச்சகம் மற்றொரு ட்வீட்டில் தெரிவித்துள்ளது.
ALSO READ: Covid-19 பரவலை தடுக்க N95 முகமூடிகள் சிறப்பாக செயல்படுகிறது: இந்திய விஞ்ஞானிகள்!