Thol Thirumavalavan Response To TVK Leader Vijay : அம்பேத்கரின் நினைவு நாளான நேற்று, (டிச.6) ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ புத்தக வெளியீட்டு விழா நடைப்பெற்றது. சென்னையில் உள்ள வர்த்தக மையத்தில் நடந்த இந்த விழாவில் நடிகரும் தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் தலைவருமான விஜய் கலந்து கொண்டார். இதில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால், தானும் விஜய்யும் ஒரே விழாவில் கலந்து கொண்டால், அதை ஊடகங்கள் வேறு மாதிரியாக சித்தரிக்கும் என்ற காரணத்திற்காக அதில் தான் கலந்து கொள்ளவில்லை என திருமாவளவன் அறிக்கை விடுத்தார்.
விஜய் பேச்சு!
அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் அம்பேத்கரின் பேரன் ஆந்த் டெல்டும்டே, த.வெ.க தலைவர் விஜய், முன்னாள் நீதிபதி கே.சந்துரு, விசிக கட்சியின் பொது செயலாளர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவின் தொடக்கமாக, விஜய் ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ புத்தகத்தை வெளியிட்டார்.
தவெக கட்சியின் முதல் மாநாடு விக்கரவாண்டியில் நடந்த போது, அதில் அனல் பறக்க பேசினார் விஜய். இதற்கு பிறகு அவர் மேடையில் பேசும் விழாவாக, இந்த நூல் வெளியீட்டு விழா இருந்தது. இதில் பேசிய விஜய், அம்பேத்கர் குறித்தும், அவருக்கு ஏற்பட்ட அடக்குமுறைகளை குறித்தும் பேசினார். பின்பு, இந்த நூலில் தன்னை பாதித்த விஷயங்கள் மற்றும் அவை தனக்கு கற்றுக்கொடுத்ததையும் கூறினார். மணிப்பூர் கலவரம் அதை கண்டுகொள்ளாமல் மத்தியில் ஆளும் ஒன்றிய அரசு என பேசிய விஜய், தமிழகத்தில் நடந்த வேங்கைவயல் பிரச்சனை குறித்தும் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க முடியாதது குறித்தும் பேசினார்.
விஜய், இறுதியில் தொல்.திருமாவளவன் குறித்து பேசியதுதான், விழாவின் ஹைலைட் ஆகிப்போனது. “விசிக தலைவர் திருமாவளவனால் இன்று வரமுடியாமல் போனது. அம்பேத்கரின் புத்தக வெளியீட்டு விழாவில் கூட கலந்து கொள்ள முடியாத அளவுக்கு கூட்டணி கட்சிகளால் எவ்வளவு pressure கொடுக்கப்பட்டிருக்கும் என்பதை யூகிக்க முடிந்தாலும், அவரின் மனது இன்று முழுக்க முழுக்க நம்முடன்தான் இருக்கும்” என்று கூறினார். இதற்கு, அரங்கமே ஆர்பரித்தது.
ஆதவ் அர்ஜுனா செய்த செயல்:
வி.சி.க கட்சியின் துணை பொது செயலாளர் ஆதவ் அர்ஜுனா, “தமிழகத்தில் கூட்டணி ஆட்சியை உருவாக்க வேண்டும், இங்கு மன்னராட்சிதான் நிலவுகிறது” என்று கூறிவிட்டார். மேலும், 2026ல் மன்னராட்சி ஒழிக்கப்படும் என்று கூறிய அவர், விஜய் வேங்கைவயல் கிராமத்திற்கு சென்று அங்கு மக்களுடன் உரையாட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இறுதியில் விழா நிறைவு பெறும் வேலையில், விஜய்யை மேடையிலேயே கட்டித்தழுவினார்.
திருமாவளவன் பதிலடி!
விஜய்யின் இந்த பேச்சுக்கு திருமாவளவன் பதிலடி கொடுத்திருக்கிறார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், ஆதவர் அர்ஜுனாவின் பேச்சு குறித்தும், விஜய்யின் கருத்து குறித்தும் கேள்வி கேட்கப்பட்டது. இது குறித்து பேசிய அவர், “திமுக கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து பேசி வரும் விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனிடம் விளக்கம் கேட்கப்படும்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, “அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டாம் என்பதை நான் சுதந்திரமாக தான் முடுவெடுத்தேன். உலகம் முழுவதும் தற்பொழுது மக்களாட்சி தான் நடைபெறுகிறது மன்னராட்சி ஒழிக்கப்பட்டு பல காலங்கள் ஆகிறது. தமிழகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் நடைபெறுகிறது” என்று கூறினார்.
மேலும் பேசிய அவர், “தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் அம்பேத்கர் நினைவு நாளில் அம்பேத்கர் தொடர்பான நூலை வெளியிட்டு இருப்பதும் அம்பேத்கர் அவர்களைப் பற்றி பேசி இருப்பதும் பெருமை அளிக்கிறது பொது நீரோட்டத்தில் அம்பேத்கர் வெகுவாக பேசப்படுகிறார் அந்த வரிசையில் விஜய் அவர்களும் எல்லோருக்கும் ஆன தலைவர் என்ற நூலை வெளியிட்டிருப்பது பாராட்டுக்குறியது.
திமுக அல்லது திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் அழுத்தம் என்ற கருத்தை அவர் பதிவு செய்திருக்கிறார் அதில் எனக்கு உடன்பாடு இல்லை அப்படி எந்த அழுத்தமும் இல்லை என்பதை நான் தெளிவுபடுத்தி இருக்கிறேன்.
அழுத்தம் கொடுத்து அதற்கு இணங்க கூடிய அளவுக்கு நானும் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் பலவீனமாக இல்லை என்பதை பதிவு செய்ய விரும்புகிறேன் இந்த நிகழ்வில் நான் பங்கேற்காமல் போனதற்கு திரு விஜய் அவர்கள் காரணம் இல்லை அவருக்கும் எங்களுக்கும் எந்தவிதமான சிக்கலும் இல்லை ஆனால் எங்கள் இருவரையும் வைத்து விஜய் திருமா ஆகியோர் மேடையில் ஏறப் போகிறார்கள் என்று அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படாத நிகழ்வை அரசியல் சாயம் பூசி உள்ளனர்.
மேலும் படிக்க | இதற்காகத்தான் விஜய்யுடன் மேடை ஏற மறுத்தேன்! உண்மையை உடைத்த திருமாவளவன்!
அவர்கள் எந்தப் பின்னணியில் இயங்குகிறார்கள் என்று கருத்துக்களை முன்வைத்தது முக்கியமான ஒன்று ஏறத்தாழ கால் நூற்றாண்டு காலம் தேர்தல் களத்தில் நாங்கள் நிற்கிறோம் ஓரளவு எங்களாலும் யூகிக்க முடியும் யார் எந்த பின்னழியில் இயங்குகிறார்கள் பேசுகிறார்கள் என்பதை கணிக்க முடியும் அந்த வகையில் தான் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவை அரசியல் ஆக்கி விடுவார்கள் அப்படி அரசியல் படுத்துவதை நான் விரும்பவில்லை இந்த அடிப்படையில் தான் தனியார் புத்தக வெளியிட்டார் நிறுவனத்திடம் தெரிவித்துள்ளேன்” என்றார்.
விஜய் மீது எந்த வருத்தமும் இல்லை!
“தமிழகத்தில் எங்களை வைத்து காய் நகர்த்துகின்ற அரசியல் நடந்து கொண்டிருக்கிறது.வருவாய்க்கு அவள் கிடைத்தது போல வாய்ப்பு கொடுக்க விரும்பவில்லை அவருக்கு வாழ்த்துக்கள்.
நான் சுதந்திரமாக எடுத்த முடிவு விடுதலை சிறுத்தைகள் கூட்டணிக்கு எந்த பாதகமும் ஏற்படாத வகையில் எடுத்த முடிவு இதில் எந்த பிரஷர் இல்லை. விஜய் சொல்லி இருக்கக்கூடிய கருத்துக்கு அவர் மட்டுமே பொறுப்பு. ஒவ்வொரு தனி மனிதனுக்கும் ஒவ்வொரு சுதந்திரம் இருக்கிறது அதன்படி அவர் கூறியுள்ளார்” என்று திருமாவளவன் விஜய் கருத்துக்கு பதில் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | திருமாவளவனுக்கு ஆதரவு! திமுகவிற்கு எதிர்ப்பு! விஜய்யின் அதிரடி பேச்சு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ