கோவையில் மாணவிக்கு பாலியல் பலாத்காரம்; 4 பேர் கைது

கோவையில் மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த 4 பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Updated: Dec 1, 2019, 09:17 AM IST
கோவையில் மாணவிக்கு பாலியல் பலாத்காரம்; 4 பேர் கைது

கோவையில் மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த 4 பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

கோவை மாவட்டம் கீரநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த 11ம் வகுப்பு மாணவி தனது பிறந்தாளை கொண்டாடுவதற்காக ஐஸ்வர்யா நகரில் உள்ள பூங்காவிற்குச் சென்றுள்ளார். அங்கு அவர் தனது சக நண்பர்களுடன் சென்றுள்ளார்.

இந்நிலையில், அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளார். தற்போது இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது.  தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி 4 பேரை கைது செய்துள்ளனர்.

போலிஸார் இதுகுறித்து விசாரணை நடத்தினர்கள். விசாரணையில் இந்த சம்பவத்தின் போது மற்ற நபர்கள் செல்போனில் வீடியோ எடுத்ததகவும் கூறப்படுகிறது.

தீவிர விசாரணையில் ஈடுப்பட்ட ஆர்.எஸ்.புரம் போலிஸார் இந்த சம்பவத்தில் தொடர்புடைய ராகுல், கார்த்திகேயன், நாராயணமூர்த்தி உட்பட 4 பேரை கைது செய்து கூட்டு பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

மேலும் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான மணிகண்டனை போலிஸார் தேடி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.