One more Nirbaya: என்று தீரும் இந்த நிர்பயா பாணி பாலியல் வன்கொடுமைகள்?

தொடரும் நிர்பயா பாணி சம்பவங்கள்.... நள்ளிரவில் ஆண் நண்பருடன் ஆட்டோவில் பயணித்த பெண்ணை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த மிருகங்களின் வெறிச் செயல்... 

Edited by - Malathi Tamilselvan | Last Updated : Mar 23, 2022, 12:30 PM IST
One more Nirbaya: என்று தீரும் இந்த நிர்பயா பாணி பாலியல் வன்கொடுமைகள்? title=

நள்ளிரவில் ஆண் நண்பருடன் ஆட்டோவில் பயணித்த பெண்ணை கடத்தி கூட்டு பாலியல் வன்புணர்வு சம்பவம் பெண்களின் பாதுகாப்புத் தொடர்பான கவலைகளையும், நிர்பயா சோக நினைவுகளையும் தூண்டுவதாக அமைந்துள்ளது.

சத்துவாச்சாரியில் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நேற்று முன்தினம் இரவு  போதையில் இருந்த இரு இளைஞர்கள் சண்டைப் போட்டுக் கொண்டிருந்தனர். அந்த வழியாக ரோந்து வந்த சத்துவாச்சாரி காவல் துறையினர் 2 பேரையும் பிடித்து விசாரணை செய்த போது. அவர்கள் இதற்கு முன் வழிப்பறி செய்த பணத்தை பங்கிடுவதில் தகராறு ஏற்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து போதையில் இருந்த இருவரையும் காவல் நிலையம் அழைத்து சென்று காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. 

மேலும் படிக்க | இளம்பெண் பாலியல் வன்கொடுமை திமுக பிரமுகர் உள்ளிட்ட 8 பேர் கைது

கடந்த 3 நாட்களுக்கு முன்பு தனியார் மருத்துவமனை பெண் ஊழியரை கூட்டு பலாத்காரம் செய்ததை கேட்டு காவல் துறையினர் அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக இளம் சிறார் உட்பட 4 பேரை கைது செய்து காவல் துறை விசாரித்து வந்த நிலையில், நேற்று மதியம் வேலூர் எஸ்.பி அலுவலகத்துக்கு ஈ மெயில் மூலம் ஒரு புகார் மனு வந்துள்ளது.

அந்த புகாரில் ஒரு பெண்ணும் அவருடைய ஆண் நண்பரும் கடந்த 16ம் தேதி இரவு வேலூர் காட்பாடியில் உள்ள ஒரு திரையரங்கில் இரவுக்காட்சி பார்த்து விட்டு வந்த போது நடந்த சம்பவங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.  

நள்ளிரவு 01.00 மணியளவில் மருத்துவமனைக்கு செல்வதற்காக ஒரு ஆட்டோவை நிறுத்தி ஏறியதாவும், அந்த ஆட்டோ மருத்துவமனை நோக்கி செல்லாமல் திசைமாறி சென்றதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | 3 வயது குழந்தையிடம் பாலியல் சீண்டல்:முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை

அந்த ஆட்டோவில் வந்த 5 நபர்கள் தங்களை மிரட்டி ஒரு மறைவான இடத்திற்கு கடத்திச் சென்று, செல்போன்கள், பணம் மற்றும் 2 பவுன் தங்க நகை ஆகியவற்றை மிரட்டி அபகரித்துக் கொண்டதாக புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தது.

பணத்தையும், நகையையும் கொள்ளையடித்த அந்த நபர்கள் தன்னை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாகவும் , எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகாரில் குறிப்பிட்டிருந்தது.  

புகாரில் இருந்த தகவல்கள், போதையில் இருந்தவர்கள், போலீசாரிடம் சொன்ன விவரங்களுடன் ஒத்துப் போனதால், புகார் வருவதற்கு முன்னரே போலீசார் குற்றவாளிகளை கண்டறிந்தது தெரியவந்துள்ளது. 

மேலும் படிக்க | இளவரசர் ஆண்ட்ரூ மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு சமரசம்

புகாரில் குறிப்பிட்டுள்ள விஷயங்கள் சொன்ன விவரங்கள் இவை: ஆட்டோவுக்காக காத்திருந்த 2 பேரிடம், இது ஷேர் ஆட்டோ என்று கூறி ஆட்டோவில் ஏற்றிக் கொண்டோம்.

இருவரும் ஆட்டோவில் ஏறியதும் காட்பாடியில் இருந்து கிரீன் சர்க்கிள் வந்ததும், சத்துவாச்சாரி சர்வீஸ் சாலை நோக்கி திரும்பியபோது, பெண் ஊழியரும் அவரது நண்பரும் இங்கே ஏன் செல்கிறீர்கள் என கேட்டனர்,

சாலையில் வேலை நடக்கிறது அதனால் சுற்றி போகிறோம் எனச் சொல்லி, பாலாற்றின் கரைக்கு அழைத்துச் சென்றோம், அங்கு கத்திமுனையில் பெண்ணை மிரட்டி அனைவரும் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்தோம். கடத்திச் சென்றவர்களிடம் இருந்து பறித்த ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி பணத்தை எடுத்தோம் என்று போதை ஆசாமிகள், போலீசாரின் விசாரணையில் தெரிவித்திருந்தனர்.

இந்த சம்பவம் வெளியே தெரிந்தால் அவமானம் என்று நினைத்து பெண் ஊழியர் மற்றும் அவரது ஆண் நண்பர் சம்பவம் குறித்து வெளியே கூறாத நிலையில் தான், ரோந்து வந்த காவல் துறையினரிடம் குற்றவாளிகள் பிடிபட்ட பின் விவகாரம் வெளிவந்துள்ளது. 

இது தொடர்பாக கைது செய்யப்பட்ட இளம் சிறார் உட்பட நான்கு பேரிடம் கொள்ளையடித்த பணம் மற்றும் செல்போனை பறிமுதல் செய்த காவல் துறையினர், அவர்கள் பயன்படுத்திய ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.

எஸ்.பி ராஜேஷ் கண்ணண் உத்தரவின் பேரில் வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க | ஆபாசமாக வீடியோ எடுத்து தமிழ் நடிகை கத்தி முனையில் பாலியல் வன்புணர்வு

ஷேர் ஆட்டோ எனக் கூறி 2 வரை கடத்தி செல்போன், பணம் ஆகியவற்றை பறித்து பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் ஆட்டோ பயணிகளிடையேயும், பொது மக்கள் மத்தியிலும் பெரும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 2012ம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதியன்று டெல்லியில் மருத்துவ மாணவி, ‘நிர்பயா’, தனது நண்பருடன் இரவில் தனியார் பேர்நுதில் பயணம் செய்த போது, 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு  தூக்கி வீசப்பட்டார். நண்பரும் தாக்கப்பட்டார்.

கடும் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிர்பயா என்று குறிப்பிடப்படும் மருத்துவ மாணவி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.  

மேலும் படிக்க | காதலியை பார்க்க சென்ற இளைஞர் பரிதாப சாவு..!

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News