இந்த ஆண்டுக்கான தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியது.
2017-ம் ஆண்டின் முதல் தமிழக சட்டசபை கூட்டத்தொடர், தமிழக கவர்னர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் உரையுடன் துவங்கி நடந்து வருகிறது. இன்றைய கூட்டத்தில் ஜல்லிக்கட்டு தொடர்பாக அவசர சட்டம் தீர்மானமாக நிறைவேற்றப்பட உள்ளது. மாநிலத்தின் வளர்ச்சி தீட்டங்கள் அறிவிக்கப்படலாம் எனத்தெரிகிறது.
இந்நிலையில் சட்டசபையில் கவர்னர் உரையை ஆரம்பித்ததும், அதை புறக்கணித்து சட்டசபை எதிக்கட்சியான திமுக வெளிநடப்பு செய்தது. ஜெயலலிதா மறைவுக்கு அமைதி காத்த மக்களுக்கு கவர்னர் நன்றி தெரிவித்தார். ஜெயலலிதாவின் சாதனைகளை விளக்கி பேசினார். மாநிலத்தின் வளர்ச்சி தொடரும் வகையில் அரசு செயல்படும் எனவும் தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ் உறுதி அளித்தார்.
Tamil Nadu Assembly Session begins, Jallikattu bill to be tabled today.
— AIADMK (@AIADMKOfficial) January 23, 2017