நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பும் காங்கிரஸ் கட்சியினர் தற்போது சத்திய மூர்த்தி பவனில் விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ள அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது சத்திய மூர்த்தி பவனில் விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், விருப்பமனுக்களை வரும் செப்டம்பர் 23, 24 ஆகிய இரு நாட்களில், நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் பெற்றுக் கொள்ள ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்ததாக கூறப்பட்டுள்ளது.
ஆனால் தற்போது அகில இந்திய காங்கிரஸ் தலைமையின் அறிவுறுத்தலின் படி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் விருப்ப மனுக்கள் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி வருகிற செப்டம்பர் 23, 24 ஆகிய இரு நாட்களில் விண்ணப்ப கட்டணமாக 1000 ரூபாய் செலுத்தி விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தையும் 25ம் தேதி புதன்கிழமை மாலை 6 மணிக்குள் சத்திய மூர்த்தி பவனிலேயே சமர்பிக்க வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் விருப்ப மனு கட்டணமாக பொதுப் பிரிவினருக்கு 25 ஆயிரம் ரூபாயும், மகளிர் மற்றும் பட்டியல் இனத்தவருக்கு 10 ஆயிரம் ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த தொகையை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி என்ற பெயரில் வரைவோலை எடுத்து விருப்ப மனுவுடன் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பு: மகாராஷ்டிரா மற்றும் அரியானா மாநிலங்களில் வரும் அக்டோபர் 21-ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடத்தப்படும் எற அறிவிக்கப்பட்டுத்து. இதேபோல் தமிழகத்தில் விக்கிரவண்டி, நாங்குநேரி, புதுச்சேரியில் காமராஜர் நகர் உள்ளிட்ட நாடு முழுவதிலும் காலியாக இருக்கும் 64 சட்டமன்ற தொகுதிகளுக்கும் அக்டோபர் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும், வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 24-ஆம் தேதி நடைபெறும் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.
நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பும் காங்கிரஸ் கட்சியினர் தற்போது சத்திய மூர்த்தி பவனில் விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ள அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது சத்திய மூர்த்தி பவனில் விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், விருப்பமனுக்களை வரும் செப்டம்பர் 23, 24 ஆகிய இரு நாட்களில், நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் பெற்றுக் கொள்ள ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்ததாக கூறப்பட்டுள்ளது.
ஆனால் தற்போது அகில இந்திய காங்கிரஸ் தலைமையின் அறிவுறுத்தலின் படி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் விருப்ப மனுக்கள் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி வருகிற செப்டம்பர் 23, 24 ஆகிய இரு நாட்களில் விண்ணப்ப கட்டணமாக 1000 ரூபாய் செலுத்தி விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தையும் 25-ம் தேதி புதன்கிழமை மாலை 6 மணிக்குள் சத்திய மூர்த்தி பவனிலேயே சமர்பிக்க வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.