டிசம்பர் மாதத்தையும், தமிழகத்திற்கு வரும் பேரிழப்புகளையும் பிரிக்கவே முடியாது என்ற பொதுவான கருத்து ஒன்று உள்ளது. அது, மக்களுக்கு ஏற்படும் பொருளாதார இழப்புகளையும், பல சிறந்த தலைவர்களின் இழப்புகளையும் குறிக்கும் வகையில் இருக்கும். அந்த வகையில், தேமுதிக கட்சியின் தலைவரும் நடிகருமான விஜயகாந்த், தனது 71வது வயதில் இன்று (டிசம்பர் 28ஆம் தேதி) உயிரிழந்துள்ளார். இவரது இழப்பு இவரது ரசிகர்கள் மட்டும் தொண்டர்கள் மட்டுமன்றி தமிழக மக்களுக்கும் பெரிய இழப்பாக பார்க்கப்படுகிறது.
டிசம்பரில் உயிரிழந்த தமிழக தலைவர்கள்..
விஜயகாந்த் மட்டுமன்றி, பல தமிழக தலைவர்களை நாம் டிசம்பர் மாதத்தில் இழந்துள்ளோம். அதனாலேயே இந்த டிசம்பர் மாதம் கறுப்பு மாதமாக கருதப்படுகிறது. அப்படி, இந்த மாதத்தில் உயிரிழந்த தலைவர்களின் லிஸ்ட்.
பெரியார்:
தமிழகத்திற்கு திராவிடத்தை போற்றுவித்தவர், தந்தை பெரியார். பலர் பேசத்தயங்கிய கருத்துக்களை உரக்க கூறிய தலைவர்களுள், மிகவும் முக்கியமானவர், பெரியார். இவர், 1879ஆம் ஆண்டு ஈரோட்டில் பிறந்தார். தனது சிந்தனைகளாலும், கருத்துக்களாலும் மக்களின் மனங்களில் எழுச்சியை ஏற்படுத்தியவர் இவர். கடவுள் மறுப்பு, பெண் விடுதலை, பெண் கல்வி, அரசியல், அறிவியல் என இவர் பேசாத, கற்பிக்காத விஷயங்களே இல்லை என்று கூறலாம். இவர் வாயிலாகவே தமிழகத்தில் பல திராவிட கட்சிகள் தோன்றின. பெரியார், தனது 94வது வயதில் 1973ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி உயிரிழந்தார்.
மேலும் படிக்க | மருத்துவர்கள் சொல்லியும் கேட்காமல் 2016 -ல் பிரச்சாரத்துக்கு சென்ற விஜயகாந்த்
எம்.ஜி.ஆர்:
நடிகரும், அதிமுக அரசியல் கட்சியின் தலைவருமான எம்.ஜி.ஆர், மக்கள் நலப்பணிகளுக்காகவே வாழ்ந்து, இறந்த தலைவர். தனது படங்கள் மூலமாக பல நல்ல கருத்துக்களை பகிர்ந்த இவர், தனது கட்சி மூலமாகவும் மக்களுக்கு நல்லது செய்யும் பல பணிகளில் ஈடுபட்டார். இவரது ஆட்சியின் போது, பள்ளி செல்லும் குழந்தைகள் வயிறார உணவு உண்டனர். பல தலைவர்கள் வந்தாலும், இவரது இடத்தை இன்றளவும் யாராலும் நிரப்ப முடியவில்லை. இவர், டிசம்பர் மாதம் 24ஆம் தேதி 1987ஆம் ஆண்டு தனது 70வது வயதில் உயிரிழந்தார்.
ஜெயலலிதா:
எம்.ஜி ராமச்சந்திரனின் அரசியல் வாரிசாக பிரவேசித்தவர், ஜெயலலிதா. எத்தனை அவமானங்கள் நேர்ந்தாலும், அதை எதிர்கொண்டு, அதிமுக கட்சியை தமிழகத்தில் நிலை நாட்டியவர், ஜெயலலிதா. இவரை தமிழகத்தின் இரும்பு பெண் என்றும் பலர் அழைத்ததுண்டு. உடல் நலக்குறைவு காரணமாக 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பிறகு, அதே ஆண்டின் டிசம்பர் மாதம் 5ஆம் தேதி உயிரிழந்தார். இவரது மறைவும் தமிழக மக்களை கலங்க வைத்தது.
விஜயகாந்த்:
நடிகரும் தேமுதிக அரசியல் கட்சி தலைவருமான விஜயகாந்த், இன்று (28 டிசம்பர்) உயிரிழந்துள்ளார். இவர், கடந்த சில மாதங்களாகவே உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இவரது இறப்பை தொடர்ந்து, பலர் ஒரு நல்ல மனிதர் இறந்து விட்டார் என்று கூறி பலர் பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க | கெத்தான கேப்டன்... சிவாஜி இறுதி ஊர்வலத்தில் சிங்கமாய் சீறிய விஜயகாந்த்! வைரல் வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ