கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தமிழகத்தில் பொதுத்தேர்வுகள் நடத்தப்படவில்லை. இந்த ஆண்டு மீண்டும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டன. பள்ளிக் கல்வியாண்டுகள் தாமதமாக தொடங்கியதால் வழக்கமாக மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெறும் தேர்வுகள் இந்த ஆண்டு மே மாதத்தில் நடத்தப்பட்டன.
மேலும் படிக்க | TN 10th result 2022: நாளை வெளியாகும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் - நேரம்?
இதனைத் தொடர்ந்து 10 மற்றும் பண்ணிரண்டாம் வகுப்புகளுக்கான விடைத்தாள் திருத்தும் பணி விறுவிறுப்பாக நடைபெற்றது. இதனால் தேர்வு முடிவுகள் எப்போது? என மாணவர்கள் காத்திருந்த நிலையில், தமிழக பள்ளிக்கல்வித்துறை தேர்வு முடிவுகள் குறித்து அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்தது. 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் ஜூன் 20 ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 20 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றன. நண்பகல் 12 மணிக்கு +12 தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றன. அமைச்சர் அன்பில் மகேஷ் அண்ணா நூற்றாண்டு நூலக கூட்டரங்கில் இருந்து தேர்வு முடிவுகளை வெளியிடுகிறார். மாணவ, மாணவிகள் தங்களின் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளங்கள் மூலம் தங்களின் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்க | நாளை நடக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் -2 தேர்வு குறித்த முழு விவரம்!
தேர்வர்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் (National Informatics Centres, மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். எஸ்.எம்.எஸ் வழியாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்பட இருக்கின்றன.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR