அதிர்ச்சி: ஆசிரியர் திட்டியதால் 12 வயது மாணவி தற்கொலை

Last Updated : Aug 31, 2017, 02:58 PM IST
அதிர்ச்சி: ஆசிரியர் திட்டியதால் 12 வயது மாணவி தற்கொலை title=

பாளையங்கோட்டையில் 12 வயது சிறுமி பக்கத்து வீட்டு மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் அமைந்துள்ள கோட்டூர் ஊரை சேர்ந்த 7-ம் வகுப்பில் படிக்கும் 12 வயது சிறுமிக்கு மாதவிடாய் ஏற்பட்டு வகுப்பறை பெஞ்சில் ரத்தம் கசிந்துவிட்டது. இதை பார்த்த ஆசிரியர் அந்தச் சிறுமியை வகுப்பை விட்டு வெளியே போகச் சொல்லி தண்டித்திருக்கிறார். இதனால் மன உளச்சலுக்கு ஆளான அந்த சிறுமி இரவு பக்கத்து வீட்டு மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். 

அந்த சிறுமி தற்கொலை செய்து கொள்ளும் முன்பாக கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அனைவரும் முன்பு தன்னை ஆசிரியார் திட்டியதால் ஏற்பட்ட அவமானத்தால், நான் தற்கொலை செய்து முடிவை எடுப்பதாக எழுதியிருக்கிறார். மேலும் எனது வகுப்பு ஆசிரியை தன்னை தொடர்ந்து அவமான படுத்தி வந்தாதாகவும் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

கடிதத்தின் அடிப்படையில், போலீசார் 26 வயதான ஆசிரியர் மீது IPC பிரிவு 306 கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending News