கோவை: கோவை கொடிசியா பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபல இந்திய டென்னிஸ் வீரர் ரோஹன் போபனா, டென்னிஸ் விளையாட்டு குறித்து மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்களிடம் கலந்துறையாடினர் இதனை தொடர்ந்து, அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். கிரிக்கெட்டை கொண்டாடும் அளவுக்கு மக்கள் டென்னிஸ் விளையாட்டை, ரசிப்பதில்லை, அதனை பார்ப்பதில்லை, ஆனால் இந்த விளையாட்டு, மாணவர்களின் படிப்புக்கு மிகுந்த பங்காற்றுகின்றது என்று போபண்ணா தெரிவித்தார்.
உடலையும், மனதையும், நிலையாக வைத்து கொள்ள டென்னிஸ் விளையாட்டு பெரிதும் உதவுகின்றது, மேலும் பெற்றோர்கள் மாணவர்களை எப்பொழுதும், வெற்றி பெற்று கொண்டே இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிரார்கள் என்று தெரிவித்த ரோஹன் போபண்ணா, அது மாணவர்களின் மனநிலையை மாற்றுகிறது என்று தெரிவித்தார்.
விளையாடும் அனைவரும் வெற்றியை எதிர்பார்த்தால் தோல்வியின் தன்மை மாணவர்களுக்கு தெரியாமல் போய்விடும் என்று கூறிய அவர், தோல்வியின் தன்மை புரிந்தால் தான் மாணவர்கள், சமநிலையை எதிர்கொள்ள முடியும், தோல்வியை கண்டு துவண்டு போகாத நிலை மேம்படும் என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க | தோல்விக்கு இதுதான் காரணம்: கேப்டன் ரோகித் புலம்பல்
வெற்றியை மட்டும் கொண்டாடிக் கொண்டிருந்தால் தோல்வியின் ரணம் அவர்களை பாதிக்கக்கூடும், எனவே வெற்றியை கொண்டாடுவது போல தோல்வியையும் அவர்களுக்கு கற்றுக்கொள்ள பழக்கப்படுத்த வேண்டும் என்று ரோஹன் போபண்ணா தெரிவித்தார். இனிவரும் காலங்களில் கிரிக்கெட் விளையாட்டை மக்கள் ரசிப்பது போன்று டென்னிஸ் விளையாட்டுக்களையும் அதிக அளவில் ரசிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என்று அவர் தெரிவித்தார்.
கிரிக்கெட்டை கொண்டாடுவது போல டென்னிஸ் விளையாட்டையும் மக்கள் கொண்டாடும் காலம் வரும் என்று கூறிய போபண்ணா மாணவர்களை ஊக்கப்படுத்தினார். பள்ளிகூடத்தில் டென்னிஸ் விளையாட்டை, மாணவர்களிடம், ஊக்கப்படுத்தும் வகையில் மாணவர்களுக்கு இப்பயிற்சியை கற்றுத்தர வேண்டும் என்று, இப்பள்ளியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறிய அவர், தன்னுடைய நேரடி கண்காணிப்பில், பயிற்சியாளர்களின் மூலமாக மாணவர்களுக்கு டென்னிஸ் பயிற்சி அளித்து வருவதாக தெரிவித்தார்.
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டிகளில் கலந்துக் கொள்ளவிருந்த இந்திய அணியில் விளையாடவிருந்த ரோஹன் போபண்ணா காயம் காரணமாக விலகினார். காயம் காரணமாக அவருக்கு முழங்காலில் ஏற்பட்டு இருக்கும் வீக்கம் குணமடைய ஓய்வு எடுக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தி இருப்பதால் ரோகன் போபண்ணா அண்மையில் நடைபெற்ற இந்தப் போட்டிகளில் கலந்துக் கொள்ள முடியவில்லை.
மேலும் படிக்க | உக்ரைனில் போரினால் முடங்கிய விவசாய உற்பத்தி; வயல்களில் பொழியும் குண்டு மழை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ