Ind vs Aus T20: தோல்விக்கு இதுதான் காரணம்: கேப்டன் ரோகித் புலம்பல்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டி தோல்விக்கான காரணத்தை வெளிப்படையாக கூறி புலம்பியிருக்கிறார் கேப்டன் ரோகித் சர்மா.

Written by - S.Karthikeyan | Last Updated : Sep 21, 2022, 08:25 AM IST
  • கேப்டன் ரோகித் சர்மா புலம்பல்
  • தோல்விக்கு இதுதான் காரணம்
Ind vs Aus T20: தோல்விக்கு இதுதான் காரணம்: கேப்டன் ரோகித் புலம்பல் title=

இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்திருக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் 20 ஓவர் போட்டி மொகாலியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. டாஸ் வென்ற கேப்டன் ஆரோன் பின்ச், பந்துவீச்சை தேர்வு செய்ய இந்திய அணி பேட்டிங் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் மற்றும் ராகுல் களமிறங்க, இருவரும் ஆரம்பம் முதலே அதிரடி காட்டினர். ரோகித் விரைவாக தன்னுடைய விக்கெட்டை இழக்க, ராகுல் அதிரடி காட்டினார்.

மறுமுனையில் வந்த வேகத்தில் விராட் கோலி நடையைக் கட்ட, அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் ராகுலுடன் சேர்ந்து சிறப்பாக விளையாடினார். அரைசதம் அடித்த சிறிது நேரத்தில் ராகுல் அவுட்டாக, சூர்ய குமார் யாதவும் அவுட்டானார். அவர் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 46 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்வரிசையில் களமிறங்கிய தினேஷ் கார்த்திக் சொற்ப ரன்களில் வெளியேற, ஹர்திக் பாண்டியா வாண வேடிக்கை காட்டினார். அவர் 71 ரன்கள் விளாசியதால் இந்திய அணி 200 ரன்களைக் கடந்தது. 

மேலும் படிக்க | உலக கோப்பை 2022-ல் இந்திய அணி விளையாடும் போட்டிகளின் முழு விவரம்!

208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியும், அதிரடி காட்ட தவறவில்லை. அந்த அணியின் கிரீன் இந்திய அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடிக்க, பின்வரிசையில் களமிறங்கிய மேத்யூ வேட், தன்னுடைய பினிஷர் ரோலை சிறப்பாக செய்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலிய அணி முன்னிலை வகிக்கிறது. இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவால் இந்த தோல்வியை ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. போட்டிக்குப் பிறகு பேசிய அவர், பந்துவீச்சு சரியில்லை என்பதை ஒப்புக்கொண்டார். 

குறிப்பாக புவனேஷ்வர் குமார் ரன்களை வாரி வழங்கினார். ஆசியகோப்பை தொடரிலேயே அவருடைய பந்துவீச்சு கடைசி கட்டத்தில் எடுபடவில்லை. இருப்பினும் அவரை டெத் ஓவர்கள் வீச மீண்டும் மீண்டும் அழைத்து தவறை செய்து வருகிறார் ரோகித். இந்தமுறையும் அதே தவறை செய்து மீண்டும் ஒரு தோல்வியை பரிசாக பெற்றிருக்கிறார். 

மேலும் படிக்க | T20 World Cup: எதிரணியை கலங்கடிக்க ரோகித் சர்மாவின் ஸ்பெஷல் பிளான்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News