வைரலாகும் கங்கனாவின் தலைவி படத்தின் இரண்டாவது லுக்

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடிப்பில் உருவாகி வரும் தலைவி படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. 

Last Updated : Feb 24, 2020, 09:57 AM IST
வைரலாகும் கங்கனாவின் தலைவி படத்தின் இரண்டாவது லுக்

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடிப்பில் உருவாகி வரும் தலைவி படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி ’தலைவி’ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. ஏ.எல்.விஜய் இயக்கும் இப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரனாவத் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகிறது. இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ஏற்கனவே கங்கனா ரனாவத், அரவிந்த்சாமி ஆகியோரின் முதல் தோற்றங்களை படக்குழுவினர் வெளியிட்டனர்.

இந்த நிலையில் தற்போது ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு தலைவி படத்தின் இரண்டாவது லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த  இரண்டாவது லுக் போஸ்டரில் கங்கனா ரனாவத் ஜெயலலிதா போலவே இருப்பதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். தலைவி படம் இந்தாண்டு ஜூன் 26-ஆம் தேதி திரைக்கு வெளிவர உள்ளது.

More Stories

Trending News