தூத்துக்குடி அனல் மின் நிலையத்திலன் 4வது அலகில் பராமரிப்பு பணி காரணமாக 210 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இந்த மின் உற்பத்தி வரும் ஜூலை 10-ம் தேதி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அனல்மின்நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இங்குள்ள யூனிட்டுகள் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது. இதனால் அவை சமீபகாலமாக அடிக்கடி பழுதாகி வருகிறது. இதன் காரணமாக அடிக்கடி மின்உற்பத்தி பாதிக்கப்படுகிறது.
ஆண்டுக்கு ஒரு முறை இங்குள்ள யூனிட்டுகள் பராமரிப்பு பணிக்காக சில நாட்கள் நிறுத்தப்படுவது வழக்கம்.
இந்நிலையில் தற்போது தூத்துக்குடி அனல் மின் நிலையத்திலன் 4வது அலகில் பராமரிப்பு பணி காரணமாக 210 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.