தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை சிபிஐ விசாரிப்பது சரியாக இருக்கும்!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கை சிபிஐ விசாரிப்பதே சரியாக இருக்கும் என சென்னை உயர்நீதி மன்றம் தெரிவத்துள்ளது! 

Last Updated : Jun 18, 2018, 11:30 AM IST
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை சிபிஐ விசாரிப்பது சரியாக இருக்கும்!  title=

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கை சிபிஐ விசாரிப்பதே சரியாக இருக்கும் என சென்னை உயர்நீதி மன்றம் தெரிவத்துள்ளது! 

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த 22-ம் தேதி 100_வது நாளாக போரட்டம் நடைபெற்றது. இதனால் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

இதை தொடர்ந்து காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் கண்ணீர் புகை குண்டு வீச்சு, தடியடி, துப்பாக்கிச் சூடு உள்ளிட்டவை நடத்தப்பட்டது. இந்தக் கலவரத்தில் போராட்டக்காரர்கள் சுமார் 13 பேர் உயிரிழந்தனர். மேலும், ஏராளமானோர் காயமடைந்தனர். இதை எதிர்த்து பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் போராட்டம் நடத்தி வந்தனர். 

இதையடுத்து, இதையடுத்து, துப்பாக்கிசூடு விவகாரம் குறித்த விசாரணையை ஓய்வுபெற்ற முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை செய்து வருகிறார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்துள்ள நிலையில்,  தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து சிறப்பு விசாரணைக்குழு கோரி தொடரப்பட்ட வழக்கில் துப்பாக்கிச் சூடு குறித்த வழக்கை சிபிஐ விசாரிப்பதே சரியாக இருக்கும் என்றும் இது தொடர்பாக தமிழக அரசு ஒருவாரத்தில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிரபித்துள்ளது.

 

Trending News