கோவில் கும்பாபிஷேகத்திற்கு ஹெலிகாப்டரில் வந்த குடும்பம்

Tuticorin Temple Festival : தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே கோவில் கும்பாபிஷேகத்தை காண ஹெலிகாப்டரில் வந்த குடும்பத்தினர் - மகன், பேரன் ஆசையை நிறைவேற்றிய இரும்பு வியாபாரி  

Written by - நவீன் டேரியஸ் | Last Updated : Jun 14, 2022, 05:15 PM IST
  • தெற்குத் தீத்தாம்பட்டியில் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
  • திருவிழாவிற்கு ஹெலிகாப்டரில் வந்து அசத்திய குடும்பத்தினர்
  • நெடுநாள் ஆசையை தீர்த்துக்கொண்ட குடும்பம்
கோவில் கும்பாபிஷேகத்திற்கு ஹெலிகாப்டரில் வந்த குடும்பம்  title=

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள தெற்கு தீத்தாம்பட்டி கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் , ஸ்ரீ கன்னி விநாயகர், ஸ்ரீ சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானை திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலின் மகா கும்பாபிஷேக விழா இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி காலையில் சிறப்பு யாக பூஜைகளும், சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன. இதன் பின்னர் புனித நீர் எடுத்துச் செல்லப்பட்டு விமான கோபுர கலசங்களுக்கு ஊற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து வேத மந்திரங்கள் முழுங்க மகா கும்பாபிஷேகம் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது. இந்த மகா கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

மேலும் படிக்க | கோயிலுக்குள் பட்டியலின தம்பதிக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் சர்ச்சை..!

இந்த கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்வதற்காக அதே கிராமத்தைச் சேர்ந்த நடராஜன் என்பவர் குடும்பத்துடன் ஹெலிகாப்டரில் வந்து அசத்தினார். நடராஜனின் தந்தை பாலசுப்பிரமணியன். இவர்களது சொந்த ஊர் தெற்கு தீத்தாம்பட்டி. கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு பாலசுப்பிரமணியன் தனது குடும்பத்துடன் கும்மிடிப்பூண்டியில் வசித்து வருகிறார். பாலசுப்ரமணியன் மற்றும் அவரது மூத்த மகன் நடராஜன் ஆகியோர் இரும்பு கடை வைத்துள்ளனர். மற்றொரு மகன்  ராஜதுரை என்பவர் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார்.

அவருடைய மூத்த மகன் நடராஜனுக்கு சிறுவயது முதலே ஹெலிகாப்டர் விமானத்தில் செல்ல வேண்டும் என்பது ஆசை. அதே போன்று நடராஜன் மகன் மோகித்-க்கும் ஹெலிகாப்டரில் செல்ல கனவாக இருந்தது. இதையெடுத்து மகன் மற்றும் பேரனின் ஆசையை நிறைவேற்ற கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு ஹெலிகாப்டரில் செல்ல நடராஜன் திட்டமிட்டார். பெங்களூரில் உள்ள தனியார் ஹெலிகாப்டர் நிறுவனம் மூலமாக அதற்கான ஏற்பாடுகளை செய்தார். 

அதன்படி நடராஜன், அவரது மனைவி சுந்தரவள்ளி, அவரது மகன் மோகித், சகோதரர் ராஜதுரை, உறவினர் அசோக் ஆகிய 5 பேரும் கும்மிடிப்பூண்டியில் இருந்து பெங்களூருக்கு காரில் சென்று அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக தெற்கு தீத்தாம்பட்டிக்கு வந்தனர். ஊருக்கு வந்து ஹெலிகாப்டர் இரண்டு முறை சுற்றியதை அக்கிராம மக்கள் ஆர்வத்துடன் பார்த்தது மட்டுமின்றி செல்ஃபி எடுத்துக் கொண்டனர். நடராஜன் தனது குடும்பத்துடன் ஹெலிகாப்டரில் இருந்து இறங்கி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் முடித்துவிட்டு, பின்னர் அதே ஹெலிகாப்டரில் மீண்டும் ஊருக்குத் திரும்பினார்.

மேலும் படிக்க | திருவிழாவில் நீதிமன்றம்: ஆங்கிலேயர் காலத்திலிருந்து தொடரும் ஐதீகம்

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News