நாடு முழுவதும் சட்டமன்றம், மக்களவைக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது என்பது ஒத்துவராது என புதுவை முதலவர் தெரிவித்துள்ளார்!
நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்திற்கான ஆதரவும் எதிர்ப்பும் நிலையாக உள்ள நிலையில், இது குறித்து முக்கிய அரசியல் தலைவர்களிடம் கருத்து கேட்கும் கூட்டம் இன்று நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து கருத்தொற்றுமையை உருவாக்க அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்த சட்ட ஆணையம் திட்டமிட்டுள்ளது. டெல்லியில், 7 மற்றும் 8-ந் தேதிகளில் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வருமாறு அங்கீகரிக்கப்பட்ட 7 தேசிய கட்சிகள் மற்றும் 59 மாநில கட்சிகளுக்கு சட்ட ஆணையம் கடிதம் எழுதிஇருந்தது.
இது தொடர்பாக, செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறியபோது; நாடு முழுவதும் சட்டமன்றம், மக்களவைக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது என்பது ஒத்துவராது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு இன்றி முக்கிய திட்டங்களை மத்திய அரசு நிறைவேற்ற முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.