வங்கக்கடலில் மீண்டும் உருவாகியது புயல்; அடுத்த 24 மணி நேரத்திக்கு கனமழை

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதால் 4 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை!  

Last Updated : Dec 13, 2018, 12:47 PM IST
வங்கக்கடலில் மீண்டும் உருவாகியது புயல்; அடுத்த 24 மணி நேரத்திக்கு கனமழை title=

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதால் 4 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை!  

வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது; அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறும் என சென்னியா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது! 

இந்நிலையில், இது குறித்து சென்னியா வானிலை ஆய்வு மைய இயக்குனர் கூறுகையில்.....

வங்க கடலில் உருவாகி உள்ள காற்றழுத்தம் புயலாக மாற வாய்ப்புள்ளதால், நாளை முதல் டிசம்பர் 17 வரை தமிழக வட கடலோர பகுதிகளிலும், புதுச்சேரியிலும் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இந்திய கடல் பகுதியில் உருவாக இருந்த தீவிர காற்றழுத்த பகுதியானது தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்துள்ளது. இது இன்று மாலை 5.30 மணியளவில் இலங்கை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதி நோக்கி நகர உள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர மண்டலமாக மாறி, அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாற வாய்ப்புள்ளது. 

இந்த புயல் சின்னமானது வடமேற்காக நகர்ந்து ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வடக்கு தமிழக கடலோர பகுதிகளில் அடுத்த 72 மணி நேரத்தில் நிலைகொள்ளும். இதன் காரணமாக டிசம்பர் 14 முதல் டிசம்பர் 17 வரை ஆந்திரா, தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோர பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. காற்றின் வேகம் மணிக்கு 45 முதல் 55 கி.மீ., வரை வீசக்கூடும். சில சமயங்களில் மணிக்கு 65 கி.மீ., வேகத்தில் காற்று வீசும். இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம். ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றவர்கள் உடனடியாக கரை திரும்பும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

 

Trending News