சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை (Sasikala's Imprisonment) சென்ற பிறகு, அதிமுகவில் உரிமை கோர சசிகலாவிற்கு எந்த அடிப்படை முகாந்திரமும் இல்லை என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருவரும் கூறி வருகின்றனர். ஆனால் சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை அனுபவித்து விட்டு வெளியில் வந்த சசிகலா அ.தி.மு.க.வை (AIADMK) மீண்டும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர தேவையான அனைத்து முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
அதேநேரத்தில் சசிகலாவின் நடவடிக்கைக்கு இதற்கு எதற்கும் வளைந்து கொடுக்காத EPS மற்றும் OPS சசிகலாவை மீண்டும் கட்சியில் சேர்க்கும் எண்ணமே இல்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்து வந்தனர். ஆனால் அதிரடி திருப்பமாக, சில நாட்களுக்கு முன்பு மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், "சசிகலாவை (Sasikala) அதிமுகவில் சேர்ப்பது குறித்து கட்சித் தலைமை மற்றும் நிர்வாகிகள் உடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். மேலும் பேசிய அவர், அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். அவர்களை ஏற்றுக்கொள்வது என்பது மக்களின் விருப்பம். அதிமுகவில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் கண்ணியத்தோடு பேச வேண்டும்" எனக் கூறியிருந்தார். இந்த விவகாரம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
ALSO READ | தொண்டர்களே, உங்கள் இடத்திற்கே வந்து நேரில் சந்திக்கிறேன்: சசிகலா அறிக்கை
தற்போது சசிகலா ஆதரவாளர் தேனி கர்ணன் பேசிய விவகாரம் மீண்டும் அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது, அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் தியாகத் தலைவி சின்னம்மா தான் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. தொண்டர்களும் அதைத்தான் விரும்புகிறார்கள். அதனால் தான் இன்னும் எடப்பாடி பழனிசாமியால் எங்கும் தன்னை பொதுச்செயலாளர் என சொல்லிக்கொள்ள முடியவில்லை. அவருக்கு அந்த பதவி மேல் ஒரு ஆசை இருப்பது தெரிந்தது தான். அமெரிக்க அதிபர் ஆகும் ஆசை கூட அவருக்கு இருக்கலாம். ஆனால் தொண்டர்கள் விருப்பம் தான் முக்கியம்.
ஓபிஎஸ் இனியும் அமைதி காக்கக்கூடாது. உடனே கட்சியினரை ஒன்று திரட்டி சின்னம்மாவை பொதுச்செயலாளராக பணிகளை தொடர அழைக்க வேண்டும். எடப்பாடி பழனிசாமியை நம்பி கெட்டவர்கள் பலர் உள்ளார்கள். அது ஓபிஎஸ் அவர்களுக்கு நன்கு தெரியும். கட்சியை வழிநடத்தும் அனைத்து தகுதிகளையும் கொண்டவர் சின்னம்மா மட்டுமே.
மழையால் பாதித்த மக்களுக்கு நிவாரணம் வழங்கியதன் மூலம் தனது கடமைகளை சரிவர செய்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டார் சின்னம்மா. இனியும் அவரை ஒதுக்குவதாக நினைத்து தங்கள் அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துக்கொள்ள வேண்டாம். துரோகிகளை மன்னிக்கும் மனம் கொண்டவர் சின்னம்மா. விரைவில் அவரிடம் கட்சியை ஒப்படைத்துவிட்டு மக்கள் பணி செய்ய ஒன்று கூடுங்கள். ஓபிஎஸ் அரசியலில் எல்லாம் தெரிந்தவர். விரைவில் அவர் நல்ல முடிவை எடுப்பார் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ALSO READ | ஓபிஎஸ் ஒரேபோடு.. சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்து ஆலோசிக்கப்படும்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR