திருவள்ளூர் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் நாராயணமூர்த்தி என்பவரிடம் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் தேதி அன்று 7 லட்சம் பணத்தை கடனாக திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக பொது செயலாளராக தற்போது பொறுப்பு வகிக்கும் கருணாகரன் பெற்றுள்ளார். இதனிடையே கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அவரது கடையில் தீ விபத்து ஏற்பட்டு 50 லட்சத்துக்கு அதிகமான பொருட்கள் சேதம் அடைந்தன, இதனால் அவர் பேசியபடி கடனை திருப்பி அடைக்க முடியவில்லை. இந்த நிலையில் பெற்ற பணத்தை நாராயணமூர்த்தி கருணாகரனிடம் கேட்டபோது ஒரு ஆண்டுகளாக நாட்களை கடத்தி வந்துள்ளார்.
மேலும் படிக்க | வியாசர்பாடி மடாலயத்தில் இன்றைய தினமே பணிகள் தொடங்கும் - சேகர்பாபு!
2020 ஆம் ஆண்டு 7 லட்சம் பணத்தை இரண்டு லட்சம் இரண்டு லட்சம் மூன்று லட்சம் என தனித்தனியாக மூன்று காசோலைகளை தனது வங்கிக் கணக்கில் இருந்து கருணாகரன் நாராயண மூர்த்தியிடம் அளித்துள்ளார். ஆனால் கருணாகரன் வங்கிக் கணக்கில் பணம் இல்லாததால் வங்கியிலிருந்து காசோலை சிறப்பு அனுப்பப்பட்டது, இதனால் நாராயணமூர்த்தி அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் அவரிடம் பணமாக கேட்டபோதும் தராமல் நாட்களை கடத்தி வந்துள்ளார். இதை தொடர்ந்து நாராயணமூர்த்தி கருணாகரன் மீது திருவள்ளூர் விரைவு நீதிமன்றத்தில் செக் மோசடி தொடர்பாக 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி 12 ந் தேதி அவர் மீது வழக்குத் தொடுத்திருந்தார்.
இந்த வழக்கின் முதல் கட்ட விசாரணை நீதிமன்றத்தில் 2020 மார்ச் 11ஆம் தேதி விசாரணைக்கு வந்திருந்தது. அதைத்தொடர்ந்து கடந்த ரெண்டரை ஆண்டுகளாக 90 முறை மேல் நீதிமன்றத்தில் வாய்தா பெற்றுள்ளார். இந்நிலையில் வழக்கில் இறுதி விசாரணை இன்று திருவள்ளூர் விரைவு நீதிமன்ற நடுவர் செல்வரசி விசாரணைக்கு முன் வந்தது நாராயண மூர்த்தியிடம் பணம் பெற்றது ஆதாரத்துடன் உறுதி ஆனதால் பண மோசடி வழக்கில் கருணாகரனுக்கு ஆறு மாத சிறை தண்டனையும் 30 நாட்களுக்குள் 7 லட்சம் பணத்தை மனுதாரருக்கு அளிக்க கோரி உத்தரவிட்டுள்ளார். மேலும் இது குறித்து மேல் கோர்ட்டில் அப்பீல் செய்யவும் ஒரு மாத காலம் அவகாசம் அளித்து நீதிமன்ற பிணையில் கருணாகரன் விடுவிக்கப்பட்டார். அதேபோன்று திருமுல்லைவாயல் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் பாபு என்பவரிடம் கடந்த 2019 ஆம் ஆண்டு 3 லட்சம் ரூபாய் பணத்தைப் பெற்று வழக்கில் கடந்த 2022 ஆண்டு நவம்பர் மாதம் அம்பத்தூர் நீதிமன்றம் 6 மாதம் சிறை தண்டனை விதித்து வழக்கில் அவர் மேல் முறையீடு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | எடப்பாடி பழனிசாமியின் புதிய பிரச்சார வாகனத்துக்கு செல்லூர் ராஜூவின் பலே விளக்கம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ