திருப்பதி: நாளை 6 மணி நேரம் தரிசனத்திற்கான அனுமதி நிறுத்தம்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை 6 மணி நேரம் தரிசனத்திற்கான அனுமதிப்பது நிறுத்தி வைக்கப்படவுள்ளது.

Last Updated : Dec 30, 2019, 05:16 PM IST
திருப்பதி: நாளை 6 மணி நேரம் தரிசனத்திற்கான அனுமதி நிறுத்தம்! title=

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை 6 மணி நேரம் தரிசனத்திற்கான அனுமதிப்பது நிறுத்தி வைக்கப்படவுள்ளது.

ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி தினங்களுக்கு முன்னதாக வரும் செவ்வாய்க் கிழமையில் கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப் பணி நடைபெறுவது வழக்கம்.

பெருமாளுக்கு உகந்த பண்டிகையான வைகுண்ட ஏகாதசி வரும் ஜனவரி 6 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தையொட்டி அனைத்து பெருமாள் ஆலயங்களிலும் சொர்க்க வாசல் எனப்படும் பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறும். சொர்க்கவாசல் திறக்கப்படுவதையொட்டி வைகுண்ட ஏகாதசி மற்றும் மறுநாள் துவாதசியன்று திரளான பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க திருமலைக்கு வருவார்கள்.

அந்த வகையில ஜனவரி 6 தேதி கொண்டாடப்படும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நாளை அதிகாலை சுப்ரபாத சேவை முடிந்ததும், காலை 6 மணி முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கான அனுமதி நிறுத்தி வைக்கப்படும்.

மேலும் அன்மை செய்தி, சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN தொலைக்காட்சியை பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Trending News