சென்னையில் திருப்பதி சாமியாரின் மஹாசத்சங்கம்! டிரம்ஸ் சிவமணி பங்கேற்பு!

திருப்பதியை தலைமையிடமாக கொண்டு ஆன்மீக சேவையாற்றி வரும் பிரம்மரிஷி குருவானந்த மகரிஷி வரும் 9ஆம் தேதி சென்னையில் மஹாசத்சங்கம் செய்ய உள்ளார்.   

Written by - Yuvashree | Last Updated : Sep 7, 2023, 02:45 PM IST
  • திருப்பதியை தலைமையிடமாக கொண்டு ஆன்மீக சேவையாற்றி வருபவர் பிரம்மரிஷி குருவானந்த மகரிஷி.
  • இவரது மஹாசங்கம் சென்னையில் நடக்கிறது.
  • இதில் ட்ரம்ஸ் சிவமணி பங்கேற்கிறார்.
சென்னையில் திருப்பதி சாமியாரின் மஹாசத்சங்கம்! டிரம்ஸ் சிவமணி பங்கேற்பு! title=

திருப்பதியை தலைமையிடமாகக் கொண்டு ஆன்மீக சேவையாற்றிவரும் பிரம்மரிஷி குருவானந்த மகரிஷி வரும் 9 ஆம் தேதி சென்னையில் மஹாசத்சங்கம் செய்ய உள்ளார் என அவருடைய பிரதான சீடர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த பிரகாஷ், ஆச்சார்யா ஸ்ரீனிவாஸ் ஸ்ரீமாலி மற்றும் ஜெகதீஷ் கடவுள் ஆகியோர் பிரம்மரிஷி குருவானந்த மகரிஷி உலக அமைதி, மன ஆரோக்கியத்திற்காக உலகம் முழுவதும் பயணம் செய்து ஆன்மீக பணியாற்றி வருகிறார் என்றும் மாபெரும் தலைவர்கள் எல்லாம் அவருடைய மஹாசத்சங்கதை கேட்டு தெளிவு பெற்றிருக்கிறார்கள் என்றும் கூறினர்.

மேலும் படிக்க | மோசடி மன்னனையே மொட்டையடித்த ரவுடிகள்-சுளுக்கெடுத்த போலீஸ்

திருப்பதியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அவரது பீடத்தில் கோசாலை அமைக்கப்பட்டு 500க்கும் மேற்பட்ட பசுக்கள் வளர்க்கப்பட்டு நாள்தோறும் பூஜை செய்யப்படுவதாகவும், தலைமை பீடத்தில் தினமும் அன்னதானம் வழங்கப்படுவதாகவும் தெரிவித்த அவர்கள், வரும் 9 ஆம் தேதி சென்னை திருவான்மியூரில் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா கன்வென்சன் சென்டரில் குபேர பலன் தரும் சித்குரு தரிசனம் மற்றும் மஹாசத்சங்கம் நடைபெற உள்ளதாக தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சிக்கு வரும் அனைவருக்கும் அனுமதி மற்றும் பிரசாதம் இலவசமாக வழங்கப்படுவதோடு,  இதற்காக சென்னை முழுவதும் 60 க்கும் மேற்பட்ட பேருந்துகள் கட்டணமின்றி இயக்கப்பட உள்ளன.

டிரம்ஸ் சிவமணி பங்கேற்பு..

மாலை 6 மணிக்கு தொடங்க உள்ள இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள், அரசியல் தலைவர்கள், முக்கியஸ்தர்கள் கலந்துகொள்ள உள்ளனர். சிறப்பு நிகழ்ச்சியாக புகழ்பெற்ற இசையமைப்பாளரும், சிவ பக்தருமான டிரம்ஸ் சிவமணி இசைக்கச்சேரி நடத்த உள்ளதாகவும் பிரகாஷ் ஜெயின் மற்றும் ஜெகதீஷ் கடவுள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க | உதயநிதியுடன் நாம் அனைவரும் நிற்க வேண்டும்! முழு ஆதரவு அளித்த வெற்றிமாறன்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News