திருவண்ணாமலை : குடும்பத் தகராறில் மனைவியை 8 துண்டாக வெட்டிய கணவன் கைது

Tiruvannamalai Murder | திருவண்ணாமலையில் குடும்ப தகராறு காரணமாக கணவன் மனைவியை எட்டு துண்டாக வெட்டி சூட்கேஸில் அடைத்து காட்டுப்பகுதியில் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Written by - Karthikeyan Sekar | Last Updated : Nov 11, 2024, 03:52 PM IST
  • திருவண்ணாமலைஅயில் அதிர்ச்சி
  • மனைவியை 8 துண்டுகளாக வெட்டிய கொலை
  • கிருஷ்ணகிரி காட்டுப்பகுதியில் உடல் வீச்சு
திருவண்ணாமலை : குடும்பத் தகராறில் மனைவியை 8 துண்டாக வெட்டிய கணவன் கைது

Tiruvannamalai Wife Murder | திருவண்ணாமலையில் குடும்ப தகராறு காரணமாக மனைவியை எட்டு துண்டாக வெட்டி சூட்கேஸில் அடைத்து கிருஷ்ணகிரி மாவட்ட காட்டு பகுதியில் கணவன் வீசியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொலை செய்து வீசப்பட்ட பெண்ணின் உடலை கிருஷ்ணகிரி காட்டுப் பகுதியில் காவல்துறையினர் தேடி வருகின்றனர். திருவண்ணாமலை நகரம் பே கோபுரம் ஒன்றாவது தெருவை சேர்ந்தவர் கோபி. இவரது மனைவி சரண்யா. இவர்களுக்கு இரண்டு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். கோபி மற்றும் சரண்யா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

Add Zee News as a Preferred Source

இந்நிலையில் கோபிக்கும் சரண்யாவிற்கும் அடிக்கடி சண்டை வருவது வாடிக்கையாக இருந்து வந்தது. சரண்யாவின் தாய் காவேரி வாரம் ஒரு முறை மகள் மற்றும் பேரக் குழந்தைகளை பார்க்க கோபியின் வீட்டிற்கு வந்து செல்கிறார். அவ்வாறு வரும்போது இருவருக்கும் சமாதானம் செய்துவிட்டு செல்வதையே வாடிக்கையாக கொண்டுள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் 30 ஆம் தேதி முதல் மகளுக்கு தொலைபேசியில் அழைத்த தாய் காவேரி, மகள் தொலைபேசியை எடுக்காததால் கடந்த 1 ஆம் தேதி மகள் வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டுக்கு வந்த தாய் மகள் குறித்து அவளது கணவர் கோபியிடம் கேட்டுள்ளார். அதற்கு கோபி உங்கள் மகள் வீட்டை விட்டு வெளியே சென்று இரண்டு நாட்கள் ஆகிறது என்று தெரிவித்து விட்டு வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார். 

மேலும் படிக்க | கலைஞர் சிலைகள் உடைக்கப்படும்... சீமான் கொந்தளிப்பு - காரணம் என்ன?

இது குறித்து தாய் காவேரி திருவண்ணாமலை நகர காவல் நிலைய போலீசாரிடம் புகார் அளித்தார், இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வந்த திருவண்ணாமலை நகர காவல் நிலைய போலீசார் கோபியின் மீது எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் அவரை ரகசியமாக கண்காணித்து வந்தனர். பின்னர் கோபியை பிடித்து விசாரணை செய்ததில் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்து பின்னர் தனது மனைவியை வெட்டி கொலை செய்தது ஒப்புக்கொண்டார். மேலும் விசாரணை செய்ததில் மனைவியை எட்டு துண்டுகளாக வெட்டி சூட்கேஸில் அடைத்து கிருஷ்ணகிரி மாவட்ட வனப்பகுதியில் ஆங்காங்கே வீசியதையும் ஒப்புக்கொண்டார். 

இதனை தொடர்ந்து கோபி அளித்த வாக்குமூலத்தின்படி திருவண்ணாமலை நகர காவல் நிலைய போலீசார் கோபியை அழைத்துக்கொண்டு கிருஷ்ணகிரி மாவட்ட வனப்பகுதியில் உடல் பாகங்களை தேடும் பணியில் கடந்த இரண்டு நாட்களாக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். குடும்பத் தகராறில் கணவனே மனைவியை கொலை செய்து விட்டு துண்டுகளாக வெட்டி காட்டுப் பகுதியில் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் படிக்க | Weather Update: நவம்பர் 13-15 வரை இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

...Read More

Trending News