இந்த ஆண்டின் முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று கலைவாணர் அரங்கத்தில் தொடங்கியது. வழக்கமான மரபுபடி இந்த ஆண்டும் ஆளுநர் உரையுடன் கூட்டம் தொடங்கியுள்ளது.
கொரோனா தொற்று தொடங்கியதிலிருந்து, தொற்று பரவல் அச்சம் காரணமாக சட்டப்பேரவைக் கூட்டம் கலைவாணர் அரங்கத்தில் நடந்து வருகிறது. அவ்வகையில், இந்த ஆண்டும் கூட்டம் கலைவாணர் அரங்கத்திலேயே நடக்கின்றது.
சட்டப்பேரவையில் முதல்முறையாக இசைத்தட்டுக்கு பதில் தமிழ்த்தாய் வாழ்த்து நேரடியாக பாடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசின் இசைக்கல்லூரி பணியாளர்கள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினர்.
ALSO READ | தமிழகத்தில் மீண்டும் மினி லாக்டவுன்? புதன்கிழமை அறிவிப்பா?
இன்று காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கியது. சட்டப்பேரவைக் கூட்டத்தை தொடக்கி வைத்த ஆளுநர் ஆர்.என்.ரவி, பல முக்கிய விஷயங்களைப் பற்றி பேசினார்.
“வாழிய செந்தமிழ்
வாழ்க நற்றமிழர்
வாழிய பாரத மணித்திரு நாடு !”
என பாரதியாரின் வரியுடன் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தன்னுடைய முதல் உரையை நிறைவு செய்தார் ஆளுநர்.
இதற்கிடையில், ஆளுநர் உரையை புறக்கணித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். ஆளுநர் தன் உரையை வாசிக்கத் தொடங்கிய உடனேயே அதிமுகவினர் கூச்சலிட்டத் தொடங்கினர். பின்னர் அதிமுக-வினர்ஆளுநர் உரையைப் புறக்கணித்து சபையை விட்டு வெளிநடப்பு செய்தனர்.
மேலும், நீட் விலக்கு சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
ALSO READ | 12ம் வகுப்புக்கான தேர்வு கட்டணம் செலுத்த தேதி அறிவிப்பு!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR