தமிழ்நாடு சட்டபேரவையில் இன்று முதல்வர் பழனிசாமியின் அறிவிப்புகளின் முழு விவரம் உள்ளே!!
இன்று காலை துவங்கிய தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் தமிழக முதவர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு அறிவிப்புகளை தெரிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் தமிழ் வளர்ச்சித்துறை, இந்து சமய அறநிலையத்துறை, இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஆகிய துறைகளில் செயல்படுத்தப்படவுள்ள புதிய திட்டங்கள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார்.
அவை பின்வருமாறு:-
ரூ.1 கோடி செலவில் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் எம்.ஜி.ஆர் பெயரில் கலை மற்றும் சமூக ஆய்வியல் இருக்கை ஏற்படுத்தப்படும். லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உட்பட உலக நாடுகளின் பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகள் அமைக்கப்படும். இதற்காக ஆண்டுதோறும் ரூ. 5 கோடி செலவிடப்படும்.
சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு மானியமாக ரூ.10 லட்சம் வழங்கப்படும். இறகு பந்து அகாடமி ரூ.10 கோடி செலவில் அமைக்கப்படும்.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ரூ.5 கோடி செலவில் உலகத் தமிழ் மாநாடு நடத்தப்படும். இணையதளத்தில் தமிழை மேம்படுத்த ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் ரூ.30 கோடியில் தங்கும் விடுதிகள் கட்டப்படும். தமிழகத்தில் உள்ள 1000 கிராமபுறக்கோயில்களில் புனரமைப்பு பணிக்காக ஒரு கோயிலுக்கு 1 லட்சம் ரூபாய் வீதம் 10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
வேலூரில் மாவட்ட விளையாட்டு வளாகம் ரூ.17.30 கோடியில் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.