அந்நிய முதலீடு முதலமைச்சர் வெள்ளை அறிக்கை வெளியிடத் தயாரா? மு.க.ஸ்டாலின் சவால்

ஊழல் அதிமுக அரசு பல கோடி ரூபாய் வீண் செலவு செய்து இரு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி என்ன பயன்? ஸ்டாலின் கேள்வி.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 7, 2019, 12:34 PM IST
அந்நிய முதலீடு முதலமைச்சர் வெள்ளை அறிக்கை வெளியிடத் தயாரா? மு.க.ஸ்டாலின் சவால் title=

தமிழக அரசு சார்பில் ஜனவரி 23, 24 ஆகிய தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடந்தது. இந்த மாநாட்டில் இந்திய தொழிலதிபர்கள் மற்றும் வெளிநாட்டு தொழிலதிபர்களும் கலந்துக்கொண்டார். இந்த மாநாட்டின் நிறைவுரை ஆற்றிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்கள், இந்த மாநாடு மூலம் 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது. தமிழகத்திற்கு மூன்று லட்சத்து 441 கோடி ரூபாய் முதலீடுகள் வரவிருக்கிறது. இதன் மூலம் 10 லட்சத்து 50 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்குமென்றும் முதல்வர் தெரிவித்தார்.

ஆனால் மத்திய அரசு வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தமிழகத்தில் கடந்த 2017ம் ஆண்டை காட்டிலும், 2018 ஆம் ஆண்டு அந்நிய நேரடி முதலீடு 21 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது எனக் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதில் 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை தமிழகம் ரூ.10,892 கோடி வருவாய் அந்நிய நேரடி முதலீடு பெற்றுள்ளது. இதே காலகட்டத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழகம் ரூ.13,898 கோடி வருவாய் பெற்றது என புள்ளி விவரம் மூலம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுக்குறித்து தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் அந்நிய முதலீடு 21% சரிவு என மத்திய அரசு செய்தி வெளியிட்டிருக்கிறது. இதற்குத் தானா இந்த ஊழல் அதிமுக அரசு, பல கோடி ரூபாய் வீண் செலவு செய்து இரு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தியது?

இதுதான் உங்கள்(அதிமுக) ஆட்சியின் லட்சணமா? அந்நிய நேரடி முதலீடு குறித்து தமிழக முதலமைச்சர் வெள்ளை அறிக்கை வெளியிடத் தயாரா? எனக்கேள்வி எழுப்பியுள்ளார்.

Trending News