சென்னை: தமிழ்நாட்டை ஆட்டிப்படைத்த கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின் சீற்றம் தணிந்து 4000 என்ற எண்ணிக்கு குறைவாக புதிய தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. மே மாதம் மூன்றாவது வாரத்தில் மக்களிடையே பீதியைக் கிளப்பும் வகையில் தொற்றின் அளவு அதிகரித்தது. 36,000-ஐத் தாண்டிச் சென்ற ஒரு நாள் தொற்றின் அளவு, ஊரடங்கு மற்றும் பல வித தொற்று பரவல் நடவடிக்கைகள் காரணமாக மெல்ல மெல்ல குறையத் தொடங்கியது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 3,867 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,96,287 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 222 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 72 பேர் இறந்தனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 33,005 ஆக அதிகரித்துள்ளது.
Perambalur 22
Pudukottai 61
Ramanathapuram 24
Ranipet 49
Salem 245
Sivagangai 55
Tenkasi 26
Thanjavur 227
Theni 45
Thirupathur 25
Thiruvallur 99
Thiruvannamalai 127
Thiruvarur 52
Thoothukudi 46
Tirunelveli 34
Tiruppur 225
Trichy 166
Vellore 52
Villupuram 66
Virudhunagar 54— TNCoronaUpdates (@TNCoronaUpdate) July 4, 2021
தமிழகத்தில் (Tamil Nadu) இன்று 4,382 பேர் தொற்று பாதிப்பிலிருந்து குணமாகி வீடு திரும்பினர். இதனுடன் தமிழகத்தில் கொரோனா தொற்றிலிருந்து குணமானவர்களின் எண்ணிக்கை 24,27,988 ஆக உயர்ந்துள்ளது.
ALSO READ: COVID 2-வது அலை முடிந்ததாக நினைக்கவேண்டாம்: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR