போராட்டத்தில் அசர வைத்த பகுதி நேர ஆசிரியர்..! கோரிக்கை நிறைவேறுமா?

பணி நிரந்தர ஆணை வெளியிடக்கோரி பகுதிநேர ஆசிரியர் ஒருவர் மரத்தில் தலைகீழாக தொங்கியபடி படம் வரைந்து அசத்தியுள்ளார்.

Written by - S.Karthikeyan | Last Updated : Jan 3, 2022, 08:50 PM IST
  • கள்ளக்குறிச்சியில் பகுதிநேர ஆசிரியர் போராட்டம்
  • பணிநிரந்தம் செய்யக்கோரி தலைகீழாக தொங்கியபடி ஓவியம் வரைந்தார்
  • தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
போராட்டத்தில் அசர வைத்த பகுதி நேர ஆசிரியர்..! கோரிக்கை நிறைவேறுமா? title=

தமிழகத்தில் பல ஆண்டுகளாக அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தம் செய்யக்கோரி, போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றனர். பகுதிநேர ஆசிரியர்கள் இதுதொடர்பாக தமிழக அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், இதுதொடர்பான ஒரு வித்தியாசமான போராட்டத்தை முன்னெடுத்த பகுதிநேர ஆசிரியர் ஒருவர், கோரிக்கை வலியுறுத்தி செய்த போராட்டத்தில் சாதனையும் படைத்துள்ளார். 

ALSO READ | சென்னை; ஊழியரை கட்டிப்போட்டு ரயில் நிலையத்தில் ரூ.1 லட்சம் கொள்ளை

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த மணலூர்பேட்டை சேர்ந்தவர் சு.செல்வம். இவர் பகுதிநேர ஓவிய ஆசிரியராக சிவனார்தாங்கல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பணிபுரிந்து வருகிறார். இவர் பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணிநிரந்தரம் அரசாணை வெளியிட வலியுறுத்தி மரத்தில் தலைகீழாக தொங்கிகொண்டு ஓவியம் வரையும் போராட்டத்தில் ஈடுபட்டார். அதில், முதலமைச்சர் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் ஆகியோரின் படங்களை முப்பது நிமிடங்களில் வரைந்தார்.

அரசின் கவனத்திற்கு கொண்டுசேர இத்தகைய வித்தியாசமான போராட்டத்தை முன்னெடுத்த அவரை சக பகுதிநேர ஆசிரியர்கள் பாராட்டினர். மேலும், அவரின் கோரிக்கையை மாவட்ட அளவிலான அதிகாரிகளின் கவனத்திற்கும் எடுத்துச் சென்றுள்ளனர். அரசுப் பள்ளிகளில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து பகுதிநேர ஆசிரியர்களாக பணியாற்றுபவர்கள் உள்ளனர். அவர்கள் தங்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்குமாறு அரசை பல்வேறு வழிகளில் வலியுறுத்தி வருகின்றனர்.

ALSO READ | சிகிச்சை பலனில்லாமல் தலையில் குண்டு பாய்ந்த சிறுவன் உயிரிழப்பு!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News