TN Exit Poll Results 2024 : அதிமுக 24 தொகுதிகளை கைப்பற்றும்... ஆச்சரியமா இருக்கே..!

AIADMK : லோக்சபா தேர்தல் 2024 ஏழு கட்ட வாக்குபதிவுகளும் நிறைவடைந்திருக்கும் நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில் தமிழ்நாட்டில் அதிமுக 24 தொகுதிகளில் வெற்றி பெறும் நியூஸ் ஜெ தொலைக்காட்சி கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது. 

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 2, 2024, 09:23 AM IST
  • அதிமுக 24 தொகுதிகளை கைப்பற்றும்
  • லோக்சபா தேர்தல் எக்ஸிட் போல் ரிசல்ட்
  • நியூஸ் ஜெ தொலைக்காட்சி முடிவுகள்
TN Exit Poll Results 2024 : அதிமுக 24 தொகுதிகளை கைப்பற்றும்... ஆச்சரியமா இருக்கே..! title=

லோக்சபா தேர்தல் 2024 வாக்குப்பதிவு நாடு முழுவதும் நிறைவடைந்தது. இந்தியா முழுவதும் இந்த தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்றது. ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், ஜூன் 1 ஆம் தேதி கடைசி மற்றும் ஏழாவது கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்தது. தேர்தல் முடிவுகள் ஜூன் 4 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் மாலை 6 மணிக்குப் பிறகு வெளியானது. தேசிய அளவில் பெரும்பாலான ஊடகங்களில் வெளியான கருத்து கணிப்புகளின்படி, பாஜக தனிப்பெருங் கட்சியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மூன்றாவது முறையாக தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சிக் கட்டிலில் ஏறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | Exit Poll முடிவுகளுக்கு திமுக பரபரப்பு ரியாக்சன்... டிகேஎஸ் இளங்கோவன் சொன்னது என்ன?

அதாவது, பிரதமர் மோடி மீண்டும் மூன்றாவது முறையாக பிரதமர் ஆக அதிக வாய்ப்பு இருப்பதாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன. என்டிடிவி, நியூஸ் 18, இந்தியா டுடே, ரிபப்ளிக், சாணக்கியா, நியூஸ் நேஷன் உள்ளிட்ட பல சேனல்களில் வெளியான கருத்து கணிப்புகளில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 350 முதல் 410 இடங்கள் வரை வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் திமுக தலைமையில் இருக்கும் காங்கிரஸ் கூட்டணியே அதிக இடங்களைக் கைப்பற்றும் என இந்த கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன. ஒரு சில சேனல்கள் 33 முதல் 37 இடங்கள் வரை திமுக கூட்டணியும், 2 இடங்களில் வெற்றி வாய்ப்பு அதிமுகவுக்கும், பாஜகவுக்கு ஒரு இடத்திலும் வெற்றி வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளன.

சில சேனல்கள் திமுக கூட்டணி தமிழ்நாடு புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளையும் கைப்பற்றும் என தெரிவித்துள்ளன. இந்த சூழலில் தமிழ்நாட்டில் இருக்கும் அதிமுக ஆதரவு சேனலான நியூஸ் ஜேவில் கருத்து கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டது. அதில் அதிமுக 24 தொகுதிகளைக் கைப்பற்றும் என தெரிவித்துள்ளன. அத்துடன் எந்தெந்த தொகுதிகளில் அதிமுக வெற்றி வாய்ப்பு அமோகமாக இருக்கிறது என்ற தொகுதிப் பட்டியலையும் வெளியிட்டுள்ளது.

கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், ஆரணி, தருமபுரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், பொள்ளாச்சி, கரூர், பெரம்பலூர், கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, நாகப்பட்டனம், சிவகங்கை, மதுரை, விருதுநகர், தென்காசி, திருச்சிராப்பள்ளி, தென்சென்னை, ஈரோடு, அரக்கோணம் ஆகிய 25 தொகுதிகளின் பட்டியலாக கொடுத்திருக்கிறது. இந்த கருத்துக் கணிப்புகளின் முடிவுகளைப் பார்த்து பலரும் ஷாக் மோடில் இருக்கின்றனர். மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் தொகுதிகள் அனைத்தும் அதிமுக வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் தொகுதிகள் எனவும், மற்ற தொகுதிகளில் அதிமுக கடும் சவாலைக் கொடுக்கும் தொகுதிகள் எனவும் இந்த கருத்து கணிப்பு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | Exit Poll: கருத்துக்கணிப்பில் தமிழ்நாடு நிலவரம் என்ன...? வல்லுநர்கள் விவாதம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News