நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நெருங்குவதையொட்டி புத்தாடைகள், இனிப்பு வகைகள், பட்டாசு விற்பனைகள், களைகட்ட துவங்கி உள்ளது. இந்த நிலையில் சேலத்தில் பாதுகாப்பான இனிப்பு மற்றும் காரம் தயாரிக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் உணவு பாதுகாப்பு துறை சார்பில் இனிப்பு, காரம் தயாரிப்பு மற்றும் விற்பனையாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் சேலம் 3 ரோடு பகுதியில் உள்ள தனியார் கூட்டரங்கில் இன்று நடைபெற்றது. சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் கதிரவன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தயாரிப்பு மற்றும் விற்பனையாளர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் கதிரவன், தீபாவளி பண்டிகையை யொட்டி கடைகளில் உணவு பாதுகாப்பு துறை சார்பில் கண்காணிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கிப்ட் பாக்ஸ்களில் தயாரிப்பு தேதி உள்ளிட்டவைகள் கட்டாயம் இருக்க வேண்டும். திருமண மண்டபங்கள் மற்றும் பெரிய இடங்களில் இனிப்பு பலகாரங்கள் செய்யும் போது தரமானதாகவும் தயாரிக்கப்பட வேண்டும். குறிப்பாக லேபிள் ஒட்டி விற்க வேண்டும் என்று தெரிவித்தவர், லைசன்ஸ் இல்லாமல் பொருட்களை தயாரிக்க கூடாது இல்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும், சுமார் ஐந்து லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம்.
இனிப்பு மற்றும் கார வகைகளில் வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக உணவு வகைகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட செயற்கை நிறமிகளை சரியான அளவு சேர்க்க வேண்டும் அதிகம் பயன்படுத்தினால், நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கலப்படத்துடன் வந்த 12 டன் சோம்பு பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது இதை பரிசோதிக்க சென்னை அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது. ஆய்வு முடிவு வந்தபின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மேலும் படிக்க | RIP: சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் காலமானார்
மேலும் தீபாவளி பண்டிகையையொட்டி விற்பனை செய்யப்படும் இனிப்பு வகைகளின் உணவு தரத்தை கண்காணிக்க 10 பேர் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், உணவு பாதுகாப்பு விதிமுறைகளை மீறி தரமற்ற இனிப்பு வகைகளை தயாரிப்போர் மீது உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மேலும் படிக்க | Domestic Violence: குடும்ப வன்முறையால் 36 ஆண்டுகள் சங்கிலிச் சிறையில் அடைபட்ட பெண்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ