சேலத்தில் இருந்து சென்னை ரிசர்வ் வங்கிக்கு ரெயிலில் கொண்டுவரப்பட்ட பணம் கொள்ளையடிக்கபட்டு உள்ளது. சேலம் - சென்னை ரெயிலின் மேற்கூரையை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை காட்டி உள்ளனர். ரூ342 கோடி பழைய ரூபாய் நோட்டுகள் ஒரு ரெயில் பெட்டியில் கொண்டுவரபட்டு உள்ளது. ரெயில் பெட்டியில் இருந்த் 228 பணப்பெட்டிகளை உடைத்து மொத்தம் ரூ.5.75 கோடி கொள்ளையடிக்கப்பட்டது.
இது குறித்து ரெயில்வே எஸ்.பி. விஜயகுமார் தலைமையில் போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் தீவிர விசாரணை நடத்தி வந்தார்கள். தற்போது இந்த கொள்ளை சம்பவம் தொடர்பான வழக்கு சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு மாற்றப்பட்டுள்ளது. ரயில்வே பாதுகாப்பு படையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் இதுவரை எந்த துப்பும் கிடைக்கவில்லை.
இந்த சூழ்நிலையில் இந்த வழக்கை விசாரிக்க 5 டி.எஸ் பி.க்கள் மற்றும் 15 இன்ஸ்பெக்டர்களை நியமிக்க சேலத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று ஆய்வு செய்த, ஆர்.பி.எப்., துணை இயக்குநர் பகத், ரயில் கொள்ளை சம்பவம் தொடர்பாக முக்கிய துப்பு கொடுத்தால் அவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் எனக்கூறினார்.