மளமளவென சரிந்தது தக்காளி விலை..! ஒரு கிலோ இவ்வளவுதானா..?

Tomato Price Today: தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்த வந்த தக்காளியின் விலை இன்று கணிசமாக குறைந்துள்ளது. ஒரு கிலோவின் விலை என்ன தெரியுமா..?   

Written by - Yuvashree | Last Updated : Aug 5, 2023, 08:32 AM IST
  • தமிழக்த்தில் தக்காளியின் விலை குறைவு.
  • கடந்த இரண்டு மாதங்களாக தக்காளியின் விலை அதிகரித்து வந்தது.
  • ஒரு கிலோ தக்காளி எவ்வளவு..?
மளமளவென சரிந்தது தக்காளி விலை..! ஒரு கிலோ இவ்வளவுதானா..?  title=

தமிழகம் உள்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தக்காளியின் விலை கடந்த சில மாதங்களாகவே தாறுமாறாக எகிறியது. நேற்று மட்டும் தமிழகத்தில் ஒரு கிலோவிற்கு 150 ரூபாய் வரை விற்கப்பட்டிருந்தது. 

அதிரடி விலை குறைவு..!

தக்காளியின் வரத்தை பொறுத்து அதன் விலை தமிழகத்தில் ஏறுவதும் இறங்குவதுமாய் உள்ளது. ஒர கிலோ கிலோ, 30-40 விற்ற காலம் மலையேறி தற்போது ஒரு கிலோ சில்லறை விற்பனையில் 200 ரூபாய் வரை விற்கப்படுகிறது. நேற்றைய நிலவரப்படி ஒரு கிலோ தக்காளியின் விலை கோயம்பேடு சந்தையில் 150 ரூபாயாக இருந்தது. ஆனால் இன்று, கிலோவிற்கு 30 ரூபாய் குறைந்து 120 ரூபாய் வரை ஒரு கிலோ தக்காளி விற்கப்படுகிறது. முதல் ரக தக்காளி 120 ரூபாய்க்கு விற்கப்பட, இரண்டாம் ரக தக்காளி கிலோவிற்கு 80 ரூபாயாக விற்கப்பட்டு வருகிறது. மூன்றாம் ரக தக்காளி அதை விட குறைவாக 70 ரூபாய்க்கு விற்க்கப்படுவதாக சந்தை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 

மேலும் படிக்க | கருகும் குறுவை சாகுபடி நெற்பயிர்கள் - பி.ஆர்.பாண்டியன் வேதனை

விலை உயர்வுக்கான காரணம்..

தக்காளியின் விலை கடந்த இரண்டு மாதங்களாக அதிகரித்தது வருகிறது. இதற்கு காரணம் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தக்காளி விவசாயிகள் பலர் தக்காளி உழுவதை விட்டுவிட்டு வேறு காய்கறிகளை பயிரிட்டதுதான் என சில ஆய்வுகள் மூலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தக்காளி விவசாயிகள் பலர் வேறு காய்கறிகளை பயிரிட்டதற்கு காரணம், மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பூச்சுகளால் தக்காளி பழுதடைந்து அவர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதுதான் என சொல்லப்படுகிறது. உத்தர பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில்தான் அதிகம் தக்காளிகள் பயிரிடப்படுகிறது. இங்கிருந்துதான் பிற மாநிலங்களுக்கும் தக்காளிகள் அனுப்பி வைக்கப்படுகின்றன. பூச்சி பிரச்சனை இந்த மாநிலங்களில் எழுந்ததால்தான் தக்காளிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

மழையும் ஒரு காரணம்..

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஆங்காங்கே கடும் மழை பெய்து வருகிறது. அதனால், ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு காய்கறிகளை ஏற்றி செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பல்வேறு இடங்கிளில் தக்காளிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சந்தையில் விற்கப்படும் தக்காளியின் விலை சில்லறை விற்பனையில் பன்மடங்காக உயர்ந்ததால் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். 

இன்றைய காய்கறி விலை நிலவரம்:

கோயம்பேட்டில் இன்று தக்காளி மட்டுமன்றி வேறு சில காய்கறிகளின் விலைகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அதன் முழு விவரம், இதோ. 

-அவரக்காய்-கிலோ ஒன்றிற்கு சுமார் 40  ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பீட்ரூட் மற்றும் கத்திரிக்காய் கிலோ ஒன்றிற்கு தலா 40 முதல் 50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 

-பச்சை குடைமிளகாய் கிலோவுக்கு 60  ரூபாய்க்கும் சிகப்பு குடைமிளகாய் கிலோ ஒன்றிற்கு 180 ரூபாய்க்கும் விற்கப்படுகின்றன. 

-கேரட் ஒரு கிலோவுக்கு 50 ரூபாயாகவும் பீன்ஸ் ஒரு கிலோவுக்கு சுமார் 100 ரூபாயாகவும் விற்கப்படுகிறது. 

-பெரிய வெங்காயம் ஒரு கிலோவுக்கு சுமார் 25 ரூபாயாகவும் சின்ன வெங்காயம் ஒரு கிலோவுக்கு 100 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 

-நாட்டுத்தக்காளி கிலோ ஒன்றிற்கு 120 ரூபாய்க்கும், பெங்களூர் தக்காளி ஒரு கிலோவிற்கு 130 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 

-சிறிய உருளைக்கிழங்கு கிலோவுக்கு 60 ரூபாயாகவும் பெரிய உருளைகிழங்கு ஒரு கிலோவுக்கு 32 ரூபாயாகவும் விற்கப்படுகிறது. 

மேலும் படிக்க | முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா மீண்டும் அதிமுகவில் இணைந்தார்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News