தக்காளி வாங்க ஆள் இல்லை! வெறிச்சோடி காணப்படும் நியாய விலை கடைகள்!

வெளி மார்க்கெட்டுகளில் விற்பனையாகும் விலையிலேயே நியாய விலை கடைகளும் தக்காளி விற்பனை செய்யப்படுவதால் வெறிச்சோடி காணப்படும் நியாய விலை கடைகள்.   

Written by - RK Spark | Last Updated : Jul 12, 2023, 01:07 PM IST
  • தக்காளி விலை கடும் உயர்வு.
  • மழை காரணமாக உற்பத்தி குறைந்துள்ளது.
  • ஒரு கிலோ 120க்கு மேல் விற்பனை.
தக்காளி வாங்க ஆள் இல்லை! வெறிச்சோடி காணப்படும் நியாய விலை கடைகள்! title=

தமிழகத்தில் தக்காளி விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால் பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகினர். இந்த நிலையில் ரேஷன் கடைகள் மூலம் தக்காளி விநியோகிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டது. அதன்படி தமிழக முழுவதும் ரேஷன் கடைகள் மூலம் குறைந்த விலைக்கு தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் சரவணபவ நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையின் கட்டுப்பாட்டில் உள்ள கடைகள் மூலம் தக்காளி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.  இதையொட்டி சரவணபவ கூட்டுறவு பண்டகசாலையின் கட்டுப்பாட்டில் உள்ள ஐந்து கடைகளிலும், விருத்தாசலத்தில் உள்ள ஐந்து கடைகளிலும் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. மொத்தம் 200 கிலோ தக்காளி கொள்முதல் செய்யப்பட்டு, ஒவ்வொரு கடைகளுக்கும் தலா 20 கிலோ வீதம் பிரித்து அனுப்பப்படுகிறது. 

மேலும் படிக்க | மகளிர் உரிமைத் தொகை யாருக்கெல்லாம் கிடைக்கும்? யாருக்கெல்லாம் கிடைக்காது?

பின்னர் அவை வாங்கிய விலைக்கே, குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதாவது லாப நோக்கம் இல்லாமல் குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில் விற்பனை செய்யப்படுகிறது என்றார்.  இந்த நிலையில் வெளி மார்க்கெட்களிலும் தக்காளி விலை 84 ரூபாய் முதல் 105 ரூபாய் வரை விற்பனையாகிறது. இதனால் ரேஷன் கடைகளுக்கு வரும் பொதுமக்கள் வெளி கடைகளில் தக்காளியை ஒவ்வொன்றாக பார்த்து நல்ல தக்காளியாக வாங்கலாம் ஆனால் நியாய விலை கடையில் அப்படி வாங்க இயலாது எனவே தாங்கள் வெளி கடைகளிலேயே வாங்கிக் கொள்வதாக பொதுமக்கள் கூறிவிட்டு சென்றனர். மேலும் பெரும்பாலான கடைகளில் கூட்டம் எதுவும் இன்றி வெறிச்சூடியே காணப்படுகிறது.

மேலும், சேலம் மாநகராட்சி பகுதிகளில் முதல் கட்டமாக 15 இடங்களில் தக்காளி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  ஒரு கிலோ தக்காளி 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் ஆண்களும் பெண்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து தக்காளியை பெற்று செல்கின்றனர், அதேபோல சேலம் மாநகராட்சி பகுதிக்குட்பட்ட 15 கூட்டுறவு நியாய விலை கடைகள் மூலம் தக்காளி விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  அதிகபட்சமாக நபர் ஒருவருக்கு இரண்டு கிலோ வீதம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் வரத்துக்கு ஏற்றவாறு தக்காளி விற்பனை அதிகரிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.   

குறைந்த விலைக்கு கூட்டுறவு சங்கங்களில் தக்காளி கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளதால் தற்போது பதுக்கள் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள வியாபாரிகள் தானாக முன்வந்து தக்காளியை வெளியே கொண்டு வர முடியும் இதனால் விலை குறைய என எதிர்பார்க்கப்படுகிறது.  இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர் உள்ளிட்ட பலர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க | திருநங்கைகளுக்கு சுயதொழில் செய்ய காவல்துறை ஏற்பாடு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News