12-ம் வகுப்பு முடித்தவுடன் வேலை பெறும் வகையில் பயிற்சி!

தமிழகத்தில் எதிர்காலத்தில் 12-ஆம் வகுப்பு படித்தாலே வேலை என்ற நிலை உருவாக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்!

Updated: Jun 15, 2018, 12:56 PM IST
12-ம் வகுப்பு முடித்தவுடன் வேலை பெறும் வகையில் பயிற்சி!

தமிழகத்தில் எதிர்காலத்தில் 12-ஆம் வகுப்பு படித்தாலே வேலை என்ற நிலை உருவாக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்!

தென்னிந்திய மண்டல பட்டயக்கணக்காளர்களின் 6 வது மெட்ரோ மாநாடு சென்னை நுங்கம்பாக்கத்தில் இன்று நடைபெற்றது. அதில், சிறப்பு விருந்தினராக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டார். இவ்விழாவில் செய்தியாலகளிடம் பள்ளி,கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியபோது..! 

தமிழகத்தில் 1 லட்சத்து 60 ஆயிரம் பேர் பொறியல் படிப்பை முடித்து விட்டு வேலை இல்லாமல் இருப்பதாகவும் அவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில் பயிற்சி மையம் அமைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு பட்டய கணக்காளர் படிப்புக்கு பயிற்சி அளிக்கப்படும் என்றும், 12 ஆம் வகுப்பு முடித்தாலே வேலை பெறும் வகையில் அரசு பயிற்சி வழங்கி வருகிறது என்றும் தெரிவித்துள்ளது. 

இதை தொடர்ந்து பேசுகையில், பள்ளி மாணவர்கள் புத்தகங்களை படிக்க நடமாடும் நூலகங்கள் மூலம் ஏற்பாடு செய்யப்படும் என்றும் மாணவர்களின் திறனை மேம்படுத்தும் வகையில் 15 பாடங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி அளிக்க சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.