போக்கு., தொழிலாளர்கள் வழக்கு: உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை!

போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தம் தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை செய்யப்பட இருக்கிறது.   

Last Updated : Jan 10, 2018, 10:47 AM IST
போக்கு., தொழிலாளர்கள் வழக்கு: உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை! title=

போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தம் தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை செய்யப்பட இருக்கிறது.

ஊதிய உயர்வு கோரி போக்குவரத்துத் ஆயிரக்கணக்கான போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர், இந்தப் போராட்டம் 7 வது நாளாக இன்றும் தொடர்கிறது.

ஆயிரக்கணக்கான போக்குவரத்து தொழிலாளர்கள் குடும்பத்தினருடன் நேற்று பங்கேற்றுள்ளனர். கொட்டும் மழையிலும் பெண்கள், குழந்தைகளுடன் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இது மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம், போராட்டம், மறியல் ஆகியவற்றையும் நடத்தி வருகின்றனர்.

தமிழகம் முழுவது நடைபெற்று வரும் போராட்டத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் காரணமாக, சென்னை உள்பட தமிழகம் முழுவதும் இன்றும் காலை முதல் குறைந்தளவிலான பேருந்துகளே இயக்கப்படுகின்றன. போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தால் தமிழகம் முழுவதும் 70 சதவீதம் பேருந்துகள் கோவையில் 60 சதவீதம் பேருந்துகள் இயக்கப்படவில்லை.

இன்று காலை நிலவரப்படி கன்னியாகுமரில் 865 பேருந்துகளில் 269 பேருந்துகள் இயக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. திருவள்ளூர்-80%, கன்னியாகுமரியில் 60%, புதுக்கோட்டை - 55% அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

போக்குவரத்துத் தொழிலாளர்கள் இன்றைக்குள் பணிக்கு திரும்பினால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்றும், ஆனால் இனி தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை இல்லை என்றும் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.

போராட்டம் நடைபெறும் என்று தொழிற்சங்கங்கள் அறிவித்ததை தொடர்ந்து தங்கள் குடும்பத்தினருடன் போக்குவரத்து தொழிலாளர்கள் ஒன்று கூடி இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தத்துக்கு எதிரான மனுக்கள் மீது இன்று விசாரணை செய்யப்பட இருக்கிறது. சென்னை உயர்நீதி மன்றத்தில் நீதிபதிகள் மணிக்குமார், கோவிந்தராஜ் அமர்வில் இன்று விசாரணை நடத்தப்படும். 

இந்த நிலையில் இந்த வேலை நிறுத்தத்திற்கு எதிரான வழக்கு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.ஏற்கனவே உயர்நீதி மன்றம், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியர்களை பணி நீக்கம் செய்யக் கூடாது என்று அரசுக்கு உத்தரவிட்டது. 

அனைத்து வழக்குகளையும் நீதிபதி மணிக்குமார் தலைமையிலான சிறப்பு அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து, ஓய்வூதிய நிலுவைத் தொகை வழங்குவது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதால் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்திற்கு தடை விதிக்க கோரிய வழக்கையும் அதனுடன் சேர்த்து விசாரிக்க தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.

எனவே நீதிபதி மணிக் குமார், நீதிபதி கோவிந்தராஜூடன் இணைந்து போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் தொடர்பான வழக்கை இன்று விசாரிக்க உள்ளனர். 

Trending News