காவிரி நதிநீர் பங்கீட்டில் தொடர்ந்து இன்னல்களை சந்தித்து வரும் தமிழகம், தங்கள் உரிமைக்காக பல வழக்குகளை நீதிமன்றத்ததில் போட்டது. அந்த வழக்குகளை விசாரித்து வந்த நீதிமன்றம், கடந்த பிப்ரவரி மாதம் 16-ம் தேதி காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான இறுதி தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது.
அந்த தீர்ப்பில் காவேரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி தண்ணீரை திறந்து விட வேண்டும் என்றும், 6 வார காலத்திற்குள்ளாக மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டு என ஆணையிட்டது.
ஆனால், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு சுப்ரீம் கோர்ட் விதித்துள்ள காலக்கெடு கடந்த மார்ச் 29-ம் தேதி முடிவடைந்த நிலையில், இது தொடர்பாக தமிழகம் முழுதும் போரட்டக்களமாக மாறியது.
இதைதொடர்ந்து, காவிரிக்காக திரை பிரபலங்கள் அனைவரும் மௌன போராட்டம் நடத்தினர். இதற்கிடையில் சென்னை மாமல்லபுரத்தில் பாதுகாப்புத் துறை சார்பில் இராணுவ கண்காடியை பாரத பிரதமர் இன்று துவக்கி வைப்பதற்காக தமிழகம் வந்தார். பிரதமரின் வருகைக்கு தமிழகத்தில் பல பகுதியில் எதிர்ப்பு எழுந்தது.
இதை தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ பதிவு ஒன்றை பாரத பிரதமர்க்கு வீடியோ பதிவு ஒன்றை வழங்கியுள்ளார்.
அந்த வீடியோவில் கமல் கூறியுள்ளதாவது...!
ஐயா வணக்கம்.,
என் பெயர் கமல்ஹாசன். நான் உங்கள் குடிமகன். இது என் மாண்புமிகு பிரதமருக்கு ஒரு திறந்த வேண்டுகோள் வீடியோ. தமிழகத்தில் நிலவும் நிலை தாங்கள் அறிந்ததே. தமிழக மக்கள், நீதிக்காக போராடி கொண்டிருக்கிறார்கள். நீதி கிடைத்தாயிற்று. அதை செயல்படுத்த வேண்டியது உங்கள் கடமை.
பாமரர்களும் பண்டிதர்களும் இந்த கால தாமதம் கர்நாடக தேர்தலுக்காகத்தான் என நம்ப தொடங்கிவிட்டார்கள். அது ஆபத்தானது! அவமானகரமானதும் கூட! இதை நீங்கள் மாற்றுவீர்கள் என்று நம்புகிறேன். தமிழக-கர்நாடக மக்கள் மற்றும் விவசாயிகளின் நலனுக்காக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்தாக வேண்டும். அது உங்கள் கடமை. நினைவுறுத்த வேண்டியது எனது உரிமை. காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பீர்கள் என நம்புகிறேன். இதில் சொல்ல தவறியதை உங்களுக்கு கடிதமாகவும் அனுப்பியுள்ளேன். வாழ்க இந்தியா என வீடியோவில் கூறியுள்ளார்.
இதோ அந்த வீடியோ...!
மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு, #KamalAppealToPM @PMOIndia @narendramodi pic.twitter.com/T6dbO0UXvy
— Kamal Haasan (@ikamalhaasan) April 12, 2018
To my Honourable Prime Minister #KamalAppealToPM @narendramodi @PMOIndia pic.twitter.com/FXlM7dDO9x
— Kamal Haasan (@ikamalhaasan) April 12, 2018