அதிகாலை முதல் சென்னையில் ஒரு மணி நேரமாக பெய்த மழை #ChennaiRain

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் மற்றும் வெப்பச்சலனம் காரணமாகவும் ஒரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Shiva Murugesan சிவா முருகேசன் | Updated: Nov 20, 2019, 11:17 AM IST
அதிகாலை முதல் சென்னையில் ஒரு மணி நேரமாக பெய்த மழை #ChennaiRain
Pic Courtesy : IMD Chennai

சென்னை: இன்று அதிகாலை முதல் சென்னையில் (Chennai) பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை (Rain) பெய்ததால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதாவது வடபழனி, மயிலாப்பூர், நுங்கம்பாக்கம், ராயப்பேட்டை, கிண்டி, மெரினா உள்ளிட்ட பல பகுதிகளில் மழை பெய்தது. அதேபோல தமிழ்நாட்டில் (Tamil Nadu) உள்ள கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி (Puducherry) மாநிலத்தில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் (Regional Meteorological Centre) அறிவித்துள்ளது.

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் மற்றும் வெப்பச்சலனம் காரணமாகவும் ஒரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு குறித்த செய்திகளை படிக்க... கிளிக்

சென்னையில் இன்று அதிகாலை நல்ல மழை பெய்துள்ளது. வானிலை மையம் தரப்பில், சென்னையை பொறுத்த வரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். அங்கு மிதமான மழை அல்லது சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்சமாக 32 டிகிரி வெப்பநிலையும், குறைந்தபட்சமாக 25 டிகிரி வெப்பநிலை செல்சியஸ் இருக்கும் எனவும் அறிவித்து உள்ளது.

தமிழகத்தை பொறுத்த வரை நேற்று கடலூர் (Cuddalore) மாவட்டத்தில் அதிக அளவில் 6 செ.மீ மழை பதிவாகி உள்ளது. அதற்கு அடுத்து தூத்துக்குடி (Toothukudi) மாவட்டத்தின் திருச்செந்தூர் (Tiruchendur) மற்றும் கடலூர் கலெக்ட்ரேட் பகுதியில் 5 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

தேசிய செய்திகளை படிக்க... கிளிக்

நவம்பர் 1 ஆம் தேதி முதல் நேற்று (நவம்பர் 19) வரை தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் 620.4 செ.மீ அளவுக்கு மழை பெய்துள்ளது. இயல்பாக இந்த மாவட்டத்தில் பெய்யும் மழையின் அளவு 361.3 செ.மீ ஆகும். அதாவது நீலகிரி மாவட்டத்தில் 72 சதவீத அளவிற்கு அதிக மழை பெய்துள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் (Regional Meteorological Centre) அறிவித்துள்ளது.

விளையாட்டு செய்திகளை படிக்க... கிளிக்

அதேபோல நாகை, ராமநாதபுரம், திருவண்ணாமலை மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், கன்னியாகுமரி மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் கேரளாவில் மிகவும் பரவலாக மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.

வட மாநிலங்களில் பனிப்பொழிவு படிப்படியாக உயர்ந்து வருகிறது. இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களில் வியாழக்கிழமை முதல் வெள்ளி வரை பனிப்பொழிவு அதிக அளவில் இருக்கும். சனிக்கிழமையன்று சற்று வீழ்ச்சியடையும் எனக் கூறப்பட்டு உள்ளது. வார இறுதிக்குள் உள்நாட்டில் 100 செ.மீ. அளவில் ஆலங்கட்டி மழை மற்றும் இடியுடன் கூடிய மழை வருவது சாத்தியமாகும்.

பனி / மழை மற்றும் இடியுடன் கூடிய மழை ஜம்மு காஷ்மீர் மீது கணிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா, கர்நாடகா மற்றும் அந்தமான் & நிக்கோபார் தீவுகளில் கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழை எதிர்பார்க்கப்படுகிறது.

இமாச்சலப் பிரதேசம், அருணாச்சல பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநிலங்களில் பனி / மழை சாத்தியமாகும். கோவா, அசாம் மற்றும் மேற்கு வங்காளங்களில் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா, ஒடிசா, ஜார்கண்ட், பீகார், உத்தரபிரதேசம், உத்தரகண்ட், ஹரியானா, டெல்லி, பஞ்சாப், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா, தெலுங்கானா மற்றும் சத்தங்கர் ஆகிய மாநிலங்களில் வறண்ட வானிலை நிலவும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.