தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் நாளை மறுநாள் பரவலாக கன மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளதால், பரவலான இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதில் வட மாவட்டங்களை விட தென் மாவட்டங்களிலும், காவிரி டெல்டா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களிலும் அதிக அளவு மழை பெய்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவது:-
மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை பெய்து வருகிறது. வளிமண்டல மேலடுக்கில் நிலவும் சுழற்சி மேகங்கள் திரண்டு வருவதால், அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்.
தென்மாவட்டங்கள் இலங்கைக்குள் கிழக்கே மேலடுக்கு சுழற்சி தற்போது உருவாகி வருகிறது. இதனால் அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம். இந்த மேலடுக்கு சுழற்சியின் காரணமாக 3 நாட்களுக்கு பிறகு தென் மாவட்டங்களில் மீண்டும் கன மழை பெய்ய வாய்ப்பு உருவாகி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.