ஆனைப்புளி பெருக்கமரம் என்றால் என்ன?

வரலாற்று சிறப்பு மிக்க 'ஆனைப்புளி' பெருக்கமரம் - கல்வெட்டினை திறந்து வைத்தார் முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின்

Written by - ZEE Bureau | Last Updated : Sep 24, 2021, 12:50 PM IST
ஆனைப்புளி பெருக்கமரம் என்றால் என்ன?

சென்னை :  பொந்தன்புளி அல்லது ஆனைப்புளி, பெருக்கமரம் என்றும் தமிழில் அழைக்கப்படும், இதன் அறிவியல் பெயர்- Adansonia digitata. இதனை ஆங்கிலத்தில் Baobab என்று அழைப்பர்கள்.

இது ஆப்பிரிக்க கண்டத்தைச் சேர்ந்த பெருக்க மரம் ஆகும். குறிப்பாக சூடான உலர்ந்து காணப்படும் சகாராவுக்கு தெற்கில் உள்ள ஆப்பிரிக்கப் பகுதிகளில் உள்ள சவானாவில் காணப்படுகிறது.  இம்மரங்கள் தமிழகம் மற்றும் இலங்கைக்கு குதிரை வணிகர்களாக வந்த அரேபியர்களின் மூலமாக ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வந்து சேர்ந்தன. குதிரைகளுக்கு உணவாக அரேபியர்கள் பொந்தன்புளி மரத்தின் இலைகள், பூக்கள் மற்றும் கொட்டைகளை கொடுப்பார்கள்.

tree

இம்மரத்தைக் கற்பக விருட்சம் என்பார்கள்.“ஐந்தருக்களில் ஒன்று. தேவர்கள் பாற்கடல் கடைந்த காலத்தில் தோன்றியது. இது விருஷவுருப் போன்றது” என கற்பக விருட்சத்திற்கு விளக்கம் கொடுக்கிறது அபிதான சிந்தாமணி.  அட, நம்ம ஊரிலும் கற்பக விருட்சமா? என ஆவலோடு எத்தனைப் பேர் இந்த மரத்தைப் பார்த்திருக்கிறார்கள் என்று தெரியாது.  ஆனால் வடஇந்தியாவில் இருந்து இந்த வழியாக இரயிலில் வந்த சாதுக்கள் சிலர், இந்த மரத்தின் கீழ் சில மணி நேரம் தியானித்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள்.

இந்த மரத்தின் அடித்தோற்றம் யானையின் வடிவத்தைக் கொண்டிருந்ததால் இதற்கு ‘யானை மரம்’ என்ற மற்றொரு பெயரும் உண்டு.  இம்மரத்தின் இலைகள் கீரையாகச் சமைத்து உண்ணக் கூடியதாகவும், கனிகள் சுவையான பானம் தரக்கூடியதாகவும் இருப்பதை பிரஞ்சு நாட்டைச் சேர்ந்த மைக்கேல் அடன்சன் என்னும் தாவரவியலாளர் கண்டார், ஆப்பிரிக்காவில் இருந்தபோது ஒரு நாளில் இரண்டுமுறை இந்த பானத்தை குடித்துவந்தார். இதனால் இவர் உடல் நலம் மேம்பட்டதாக நம்பினார்.

tree

இம்மரத்தின் சிறப்பினை உணர்ந்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று(24.09.2021) ராஜிவ் காந்தி அரசு பொதுமருத்துவமனையில் 150 ஆண்டுகள் பழமைவாய்ந்த பெருக்கமரத்தை பார்வையிட்டு, அதன் சிறப்புகள் குறித்த கல்வெட்டினை திறந்து வைத்தார்.  இந்த நிகழ்ச்சியில் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வு துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் மாண்புமிகு இந்து மற்றும் சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழச்சி தங்கபாண்டியன் ,கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, முதன்மை செயலாளர் தேசிய நலவாழ்வு குழும இயக்குனர், தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குனர் தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழக மேலாண்மை இயக்குனர், மருத்துவ கல்வி இயக்குனர், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் முதல்வர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.  மேலும் தமிழக முதல்வர் மக்களை தேடி மருத்துவம் மையத்தையும் திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

stalin

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

More Stories

Trending News