ரஜினி, திமுக-வை பாராட்டி இருப்பது வியப்பாகதான் இருக்கிறது -தமிழிசை

Last Updated : May 19, 2017, 03:44 PM IST
ரஜினி, திமுக-வை பாராட்டி இருப்பது வியப்பாகதான் இருக்கிறது -தமிழிசை title=

5_வது நாளான இன்று நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்கள் மத்தியில் பேசினார். அப்பொழுது தமிழக அரசியல் தலைவர்களை குறித்து கருத்து தெரிவித்தார். 

அவர் கூறியது, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நல்ல திறமையான நிர்வாகி. சோ அடிக்கடி சொல்வார். ஸ்டாலினை மட்டும் சுதந்திரமாக செயல்பட விட்டால் மிகவும் நன்றாக செயல்படுவார். ஆனால் சுதந்திரமாக விடமாட்டார்கள் என்றார். மேலும் அன்புமணி ராமதாஸ், திருமாவளவன், சீமான் ஆகியோரையும் பாராட்டி பேசினார். 

விமர்சனம் என்பது நம்மை வலுப்படுத்தும் ஒரு செயல் தான். அரசியலில் விமர்சனம் தான் மூலதனம். எதிர்ப்பு இருந்தால் தான் வளர முடியும், எனவே, போர் வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என ரஜினிகாந்த் கூறினார்.

இதற்கு பதில் அளித்து தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது: அரசியல் மாற்றம் தேவை என ரஜினி பேசியுள்ளது வரவேற்கத்தக்கது. ஆனால் ஊழலுக்கு காரணமான ஸ்டாலினை ரஜினி புகழ்ந்தது ஏன்? கேள்வி எழுப்பி உள்ளார். 

தமிழகத்தில் அரசியல் கெட்டு விட்டதாக ஆதங்கப்படும் ரஜினி திமுக-வை பாராட்டி இருப்பது வியப்பாகதான் இருக்கிறது. ஊழலுக்கு காரணமான ஸ்டாலினை, ரஜினி ஏன் புகழ்ந்தார் என தெரியவில்லை தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். 

Trending News